Thursday, February 18, 2010

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?



18 பிப்ரவரி, 2010 12:06 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayabarathans@gmail.com> எழுதியது:
////வேந்தன் அரசு

சின்சின்னாட்டி

(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."   ////

வேந்தரே,
 
மதம் (சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவரை ஏன் பூஜிக்கிறீர் ?      
 
ஜெயபாரதன் ஐயா,
 
வள்ளுவர் எந்த மதத்தையும் தொடங்கவில்லை.
எந்த கடவுளை குறிக்கிறார் எனவும் தெளிவில்லை
 
அவர் என்னைபோல் ஒரு மனிதர்.
தான் கடவுளின் அவதாரம், கடவுளைக்கண்டேன் என்ற பொய்யுரைகளை சொல்லவில்லை
அவர் கடவுளையே சபிக்க தயங்கவில்லை
எனவே என்னைப்போன்ற முரணியோருக்கு வள்ளுவமே மதம்.
 
கற்றதனால் ஆய பயன் வாலறிவனை தொழனும் என்கிறார். அது நம்பிக்கையாளர்களுக்காக அவர் கால நூல்மரபை ஒட்டி எழுதியுள்ளார். அது அவர் பண்பாடு.
 
காட்டுமிராண்டி காலத்தில்தான் கடவுள் கண்டு பிடிக்கப்பட்டார்
காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் கடவுள் அவதாரம் எடுத்தும் தூதர்களை அனுப்பியும் உள்ளார்.
 
இன்றைக்கு அவரை வரச்சொல்லுங்கள் பார்ப்போம்?
 
 
 
உண்மை கடவுள் என்பது மதங்களின் கொள்கை அல்லவா ?
 
 
உண்மைதான் கடவுள். வேறு கடவுள் இல்லை
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment