[அன்புடன்] மெளனத்தின் வாயிலாய் மனதோடு மன்னிப்பு
மெளனத்தின் வாயிலாய் மனதோடு மன்னிப்பு
=========================================
மெளனமே மொழியாக
மனதெங்கும் வலியாக
இதயத்தின் ராகத்தில்
இசைக்கின்ற கீதமிது
அன்புடன் தோட்டமதில்
ஆனந்தமாய் ஆடிடும்
ஆசைமிகு குழந்தை நான்
அளந்திடும் மழலையில்
கேட்கின்றேன் மன்னிப்பு
பிரிவின் ஆழத்தில்
உறவின் வலிமை புரியும்
தவிர்க்க முடியா காரணங்கள்
தவிர்த்ததெந்தன் பங்களிப்பை
விரல்கள் துடித்தன
வார்த்தைகள் எகிறின
விதைத்திடும் நிலமின்றி
விதைகள் கருகின
கிடைத்திட்ட வேளை தன்னில்
கலந்திட்டேன் மீண்டும்
அன்புடன் உள்ளங்களிடம்
மெளனத்திற்கு மனதினுள்
மெளனமாய் மன்னிப்பும்
கேட்டுக் கொண்டேன்
உள்ளம் குதூகலிக்க
உணர்வுகள் குடை விரிக்க
ஆனந்தக் கூத்திட
ஆரவாரமாய் வந்திட்டேன்
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment