Wednesday, February 17, 2010

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

////எப்படியென்றால் உலகில் உள்ள கலைசெல்வங்கள் அனைத்தும் இணையம் மூலம் ஏற்கனவே வந்துவிட்டன.  அதை ஆங்கிலத்தில் படித்து கொள்ள வேண்டியது என்பதே.////
 
ஆங்கிலம் தெரியாதவருக்கு, தமிழ் வளர்ச்சி அடைவதற்குத் தமிழில் உலகக் காவியங்கள், கலைகள் தமிழில் அமைய வேண்டும். தமிழில் உயர்தர நூல்கள் உருவாவதற்கு அவ்வழிதான் முதற்படி.
 
அந்தக் காலத்தில் அந்தணர் ஆங்கிலத்தை மட்டும் முன்னதாய்க் கற்று மற்ற தமிழரை இப்படித்தான் கீழே தள்ளினார். 
 
////தமிழில் மொழிபெயர்க்கும்வரை காத்திருப்பது கடல் வற்றி கொக்கு மீன் பிடித்த கதைதான். காரணம் தமிழகத்தில் அதற்கான சந்தை இல்லை.அட்வான்ஸ்டு லெவல் புள்ளியியல் புத்தகம் ஒன்றை தமிழில் எழுதினால் அதுக்கு சந்தை வேண்டுமென்றால் +2 லெவலை தாண்டி எழுத முடியாது.கல்லூரி எங்கும் ஆங்கில வழிகல்வி.////
 
சந்தை இல்லை என்பதால் சரக்குகள் தேவையில்லை என்பது விந்தையாக இருக்கிறது.
 
தமிழ் மொழி மெல்லச் சாகாமல் வேகமாய்ச் சாகும்.
 
///தமிழ் புள்ளியியல் புத்தகத்தை யார் வாங்க போகிறார்கள்? இலவசமாக இனையத்தில் போட்டாலும் ஆங்கில வழியில் கல்லூரி கல்வி கற்கும் மாணவர்கள் அதை படிக்க மாட்டார்கள். ////
 
ஆங்கில வழியில் கற்ற மேதைகளுக்குத் தமிழ் வளர்ச்சியில் கவலை இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை.
 
சுஜாதா நாவலே முதல் பிரதி ஐம்பது பிரதி தான் அச்சடிக்க இயல்கிறது என்கின்றனர். அதனால் பதிப்பகதுறை தமிழில் லாபம் ஈட்டும் அளவுக்கு வளரவில்லை என்பதே யதார்த்தம்

குறைவாக விற்பனையானாலும் இலக்கிய விஞ்ஞானப் படைப்புகளின் ஆக்கம் வளர வேண்டும்.
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++
 
 
2010/2/17 செல்வன் <holyape@gmail.com>


2010/2/17 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>

நண்பர்களே,
 

எழுத்துச் சீர்திருத்தங்கள் இப்போது நமது முதற்பணி அல்ல. 
 
நடைத் தமிழில், நல்ல படைப்புத் தமிழில் ஆயிரம் ஆயிரம் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்கள் ஆக்குவதே நமது முதற் கடமை.
 
 


அதாவது மக்களுக்கு புரியும் மொழியில்,நடையில் எழுதவேண்டும் என்கிறீர்கள்.

உதாரணத்துக்கு "நர்ஸ் தெர்மாமீட்டரை எடுத்தார்".இப்படி எழுதினால் மக்களுக்கு புரியும்.

 "தாதி வெப்பமானியை எடுத்தார்" என்றால் படிப்பவர்கள் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு புத்தகத்தை பரணில் வைத்துவிட்டு காததூரம் ஓடிவிடுவர்.

எழுத்தின் நோக்கம் யாது? யாருக்காக எழுதுகிறோம்? புத்தகம் வாசகர்களை முன்னிறுத்தி எழுதப்படவேண்டுமா இல்லை எழுத்தாளனை முன்நிறுத்தி எழுதப்படவேண்டுமா?

யோசிக்க வேண்டிய விஷயம்.

தற்போதைய காலகட்டத்தில் பாரதியின் கட்டளை அமுலாகும் விதம் எப்படியென்றால் உலகில் உள்ள கலைசெல்வங்கள் அனைத்தும் இணையம் மூலம் ஏற்கனவே வந்துவிட்டன.அதை ஆங்கிலத்தில் படித்துகொள்ளவேண்டியது என்பதே.தமிழில் மொழிபெயர்க்கும்வரை காத்திருப்பது கடல் வற்றி கொக்கு மீன் பிடித்த கதைதான்.காரணம் தமிழகத்தில் அதற்கான சந்தை இல்லை.அட்வான்ஸ்டு லெவல் புள்ளியியல் புத்தகம் ஒன்றை தமிழில் எழுதினால் அதுக்கு சந்தை வேண்டுமென்றால் +2 லெவலை தாண்டி எழுத முடியாது.கல்லூரி எங்கும் ஆங்கில வழிகல்வி.தமிழ் புள்ளியியல் புத்தகத்தை யார் வாங்க போகிறார்கள்? இலவசமாக இனையத்தில் போட்டாலும் ஆங்கில வழியில் கல்லூரி கல்வி கற்கும் மாணவர்கள் அதை படிக்க மாட்டார்கள்.சுஜாதா நாவலே முதல் பிரதி ஐம்பது பிரதி தான் அச்சடிக்க இயல்கிறது என்கின்றனர். அதனால் பதிப்பகதுறை தமிழில் லாபம் ஈட்டும் அளவுக்கு வளரவில்லை என்பதே யதார்த்தம்

--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment