Thursday, February 18, 2010

[அன்புடன்] மை நேம் இஸ் கான் MY NAME IS KHAN

ஒரு துணிச்சலான இந்திப்படம். ஒரு முஸ்லிமாக இருந்து சொல்லுவது கூட
கடினம். இஸ்லாத்தில் வன்முறை போதிக்கவில்லை என்பதை அழகிய கதை மூலம்
ஷாரூக் கான் மற்றும் காரன் சொல்லி இருக்கிறார்கள். கதை ஆடிஸிம்
பாதிக்கப்பட்ட சக மாணவர்களால் கேலிக்கு கிண்டலுக்கும் உள்ளாகும் ரிஸ்வான்
(ஷாரூக் கான் )1983 கலவரத்தால் பொதுவாக இந்துகளுக்கு எதிராக இஸ்லாமியர்
மனதில் ஏற்படுத்தப்பட்ட எண்ணம் அவர்மனதிலும் பதிவதை அவரது தாய் .
மனிதர்களிடையே இந்து முஸ்லிம் என வேறுபாடு கிடையாது. நல்ல மனிதர்கள்
கெட்ட மனிதர்கள் என்று தான் வேறுபாடு உண்டு என்று சொல்வதிலிருந்து
தொடங்கிறது. ரிஸ்வான் அமெரிக்கா சென்று விவாகரத்தான 12 வயது மகனுடன்
வாழும் மந்திராவை (கஜோல்) சந்தித்து தனது காதலை புதுவிதமாக
வெளிபடுத்துகிறார். கல்யாணத்துக்கு பின் நன்றாக செல்லும் வாழ்க்கையில்
9/11 க்கு பின் அமெரிக்க மக்களின் வெறுப்புக்கு உள்ளாகும் முஸ்லிம்
மக்களின் அவலத்துக்கு உள்ளாகிறது. ரிஸ்வானை கல்யாணம் செய்த பின்
மந்திராவின் பையனின் பெயருடன் கான் எனும் பெயர் ஒட்டி கொள்ள அது அவனது
உயிருக்கு உலைவைக்கிறது. மகனின் இறப்புக்கு ரிஸ்வானை தான் மணந்தது
அவருடைய பெயரை தனது மகன் பெயருடன் ஒட்டி கொண்டது போன்றவை தான் காரணம் என
புழுங்கும் மந்திரா ரிஸ்வானை வெறுத்து ஒதுக்கி அவர் தனது பெயர் கான்
ஆனால் நான் தீவிரவாதி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி சொன்ன பிறகு தன்னை
சந்திக்கலாமென சொல்ல அதை வேத வாக்காக எடுத்து கொண்டு ஜனாதிபதியை
சந்திக்க ரிஸ்வான் பயணிப்பது அதில் அவர் தனது இஸ்லாமிய பெயரால் படும்
துன்பங்கள் ஆகியவற்றை துணிச்சலாக சொல்லுகிறது இப்படம். இஸ்லாமியர்
மட்டும் அல்ல ஒரு இனத்தில் ஒரு பிரிவினர் செய்யும் தவறுகளுக்கு
ஒட்டுமொத்தமாக ஒரு இனமே வெறுக்கப்படும் அவலம் உலகம் முழுவதும்
விரவிகிடக்கிறது. வரலாற்றை திருப்பி பார்த்தால் இந்த தவறை எல்லா இனமும்
செய்திருக்கும். பாதிக்கப்பட்டும் இருக்கும் .
கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment