Monday, February 15, 2010

[தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

அண்மையிலே இப்படிச்சொன்னேன்:
_______ 
Buzz என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
சி'யாச்' பெ'ர்னாட்சா^ சொன்னாராம்:
"I rang a second time, but the answer was buzz, buzz".
இது நடந்தது 1913.
 
To buzz off, to buzz in, buzz-kill, give me a buzz என்பதுபோல பல
பயன்பாடுகள் உள்ளன. ஆனால் ஆக்ஃசுபோர்டு அகராதி
என்ன சொல்லுதுன்னா. 1398 ஆம் ஆண்டில் buzz -ங்குற
சொல் வினைச்சொல்லா இருந்துதாம். அதன் பொருள்:
"To make the humming sibilant sound characteristic of bees and other insects;
to fly out, in, etc. with such a sound.".
ஆனால் ஆங்கிலத்தில் 247 ஆண்டுகள் கழித்துதான், அது
பெயர்ச்சொல்லாப் பயன்பட்டதாம்.
அதாவது 1645 லே A sibilant hum, such as is made by bees, flies,
and other winged insects.
அப்படின்னு ஆக்ஃசுபோர்டு அகராதி சொல்லுது.
தமிழ்லே இதை சுரும்பு என்போம் அல்லவா.
வண்டுகள் எழுப்பும் ஒலி.
சுரும்பு என்பது வினையும் ஆகும் பெயர்ச்சொல்லும் ஆகும்.

சென்னைத் தமிழிலே, செங்கல்பட்டுத் தமிழிலே சொன்னால்,
புச்சா கிசுகிசுத்தா புசு. buzz என்பதை புசுன்னு சொல்லலாம்.
புச்சா இன்னா தோணுது, இன்னா நடக்குதுன்னு புசுப்பறது.
இன்னான்னு சொல்றீங்க?
--------------------------------
 
Buzz என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்*ச்*  ( z = ச்*   ba = ப' )
Bus என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்˘  (s = ச்˘ )
 
(சொறி சிரங்குதான் :)  )
 
எந்தவொரு மொழியாலும் பிற மொழியில்
வழங்கும் (ஏன், தங்கள் மொழியில் வழங்கும்
எல்லா) ஒலிப்புகளையும் துல்லியமாகக் காட்ட இயலாது.
இதனை நன்குணர்ந்து துணிந்து விதி செய்தவர்கள்
தமிழர்கள் (மேற்கத்திய மொழியலாளர்கள் இதனை
அறியவில்லை, உணரவில்லை என்றால்
இது உண்மையல்ல என்று பொருள் இல்லை. தமிழின்
பெருமையை ஒருநாள் உணர்வர்)
 
செ'யபாரதன் ஐயா போன்றவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
என்பதனை நன்கு அறிவேன். இத்தாலியர்கள் Hominid என்பதை Ominid
என்கிறார்கள். Helium என்பதை Elio என்கிறார்கள். Hydrogen என்பதை
Idrogeno என்கிறார்கள். Holmium என்னும் தனிமத்தை Olmio என்கிறார்கள்,
Hafnium என்னும் தனிமத்தை Afnio என்கிறார்கள்
Helicopter என்பதை Elicottero என்கிறார்கள்.
Holocaust என்பதை olocausto என்கிறார்கள்.
உரோமன் எழுத்தைக் கொண்ட அவர்களே இப்படி
எழுதுகிறார்கள். ஒரு மொழியை எழுதும்பொழுது அதன் இயல்போடு
அதனை மதித்து எழுத வேண்டும் என்று நினைக்க, ஏற்க
மறுப்பவர்களிடம் எப்படி ஐயா கருத்தாடுவது. தனி மனிதர்
பெயருக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கி வரும்
மொழியின் அடிப்படை நெடுங்கணக்கையே மாற்ற வேண்டும்,
என்று அடம் பிடிப்பவர்களிடம் என்ன கூறமுடியும். சீன மக்களின்
பெயரையோ, அழகப்பன், யாழினி, ஞானசேகரன் போன்ற
பெயர்களையோ ஆங்கிலத்தில்தான் எழுதிவிட முடியுமா?
இதைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கான இடங்களில்
கூறியாகிவிட்டது. அறிவடிப்படையில்,
திறந்த மனப்பான்மையுடன் கருத்தாடினால் பயன் இருக்கும்.
செ'யபாரதன் ஐயா அடிக்கடி கூறுவது இந்த Higgs particle.
ஏன் இதனை இக்ஃசு துகள் என்றால் அதன் பண்புகள்
மாறிவிடுமா? Higgs boson என்பதில் உள்ள boson என்னும் பெயரை
போசான் (pohsaan) என்றுதானே எழுதுகிறோம். தமிழில்
இக்ஃசு போசான் எனப்படும் என்றால் போதுமே. வருங்காலத்தில்
மில்லியன் கணக்கான சொற்களாயினும், ஒருமொழியில் இருந்து
வேறொரு மொழிக்கு உடனுக்குடன் மாற்றுகள் கிடைக்கும்.
நம் தமிழ் மொழியில் எழுத பேச எது வசதியாக உள்ளதோ
அப்படிச் செய்வதே நல்லது. கருத்துகள்தாம் முக்கியம்.
ஒருமொழிப் பெயர்ச்சொல்லின் ஒலிவடிவம் அல்ல.
எளிய செய்தி,
 
அன்புடன்
செல்வா
 

 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment