Re: [அன்புடன்] Re: என் பார்வையில்
பிராத்தனை
அன்று..
ஊமையை பேச வைத்தீர்!
குருடருக்கு பார்வை தந்தீர்!
செவிடரை கேட்க வைத்தீர்!
இறந்தவரை உயிர்ப்பித்தீர்!
இன்று... நாங்கள் ..
பேச முடிந்தும் - எங்கள் நாட்டின்
அவலங்களை எதிர்த்து
பேசும் ஊமையாய் இருக்கிறோம்.
பார்வை இருந்தும் - நடக்கும்
அநியாயங்களை தட்டி கேட்காமல்
கண்ணிருந்தும் காணதது போல் இருக்கிறோம்.
கேட்க முடிந்தும் - தினம் விழும்
உதவிக் குரல்களை உதாசீனப் படுத்தி
கேளாதது போல நடிக்கிறோம்.
மொத்தத்தில் - குடிமக்களாய்
வாழாமல் வெறும் நாட்கள் கடத்தும்
மாக்களாய் தான் இருக்கிறோம்.
ஆகவே கர்த்தரே!!!
மீண்டும் உயிர்த்தெழுங்கள்...
ஆமென்.
--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
-- அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment