Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
///Buzz என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
சி'யாச்' பெ'ர்னாட்சா^ சொன்னாராம்: ///
நோபெல் பரிசு பெற்ற ஆங்கில இலக்கிய மேதை ஜியார்ஜ் பெர்னாட் ஷாவைக் கிரந்த வெறுப்பாளர் தமிழில் சி'யாச்' பெ'ர்னாட்சா^ என்று துணிந்து கொலை செய்வது தமிழுக்கும் இழுக்கு. தமிழருக்கும் இழுக்கு.
கிரந்த வெறுப்பாளர்களே ! உலக எழுத்தாள மேதைகளின் பெயரைக் கொலை செய்யத் தமிழை ஆயுதமாகத் தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.
ஜெயபாரதன்
+++++++++++++++++++
2010/2/15 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>
நண்பர் செல்வா ஹீலியம் என்று ஆங்கிலத்தில் எழுத மாட்டாராம். ஆனால் இத்தாலிய மொழியில் ஈலியோ வென்று எழுதுவாராம்.விஞ்ஞானத்தைத் தமிழில் மேம்படுத்த ஆங்கிலத்தின் உதவி மிக அவசியம். கூடியவரை ஆங்கில விஞ்ஞானப் பெயர்களைப் அப்படியே தமிழில் எழுவது மேற்படிப்புக்கு வசதி செய்வது.நமது கல்லூரி மேற்படிப்பு விஞ்ஞானம் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் மாணவருக்கு ஹீலியம் என்று கீழ் வகுப்பில் படித்தால் மிக ஏதுவாக இருக்கும்.கலந்து விட்ட மற்ற மொழிச் சேர்க்கைகளை (சமஸ்கிருதம், ஆங்கிலம்) முற்றிலும் விரும்பாது அவற்றின் மீது வெறுப்புக் கொள்வது தமிழ் மொழியை ஒரு போதும் வளர்க்காது.ஜெயபாரதன்+++++++++++++++++++++++++++2010/2/15 செல்வன் <holyape@gmail.com>
பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப்,பிகாடா இப்படி ஆயிரகணகான சோஷொயல் மீடியா நெட்வர்க் வெப்சைட்டுகள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன.ஒவ்வொன்றையும் ரீங்காரம், முகநூல் என மொழிபெயர்த்துகொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. பேசுபுகு, பச்சு என எழுதி கொள்வது தனி தமிழ் ஆர்வலர் விருப்பம். நான் பேஸ்புக், பஸ்ஸ் என தான் எழுத போகிறேன்.
--
செல்வன்
www.holyox.tk
"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment