[தமிழமுதம்] சூட்கேசினுள் மறைந்தவாறு இத்தாலிக்குள் பிரவேசிக்க முயன்ற 15 வயது சிறுவன்
பூட்டிய பயணப் பெட்டியொன்றில் மறைந்த நிலையில் இத்தாலிக்குள் பிரவேசிக்க முயன்ற 15 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளான்.
மேற்படி பெட்டி வைக்கப்பட்டிருந்த காரின் அடிப்பகுதியில் போர்வைகளால் சுற்றப்பட்ட நிலையில் அச்சிறுவனின் சகோதரனான 17 வயது இளைஞன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளான்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மேற்படி சகோதரர்களை கிரேக்கத்திலிருந்து சட்ட விரோதமாகக் கடத்திவந்த குற்றச்சாட்டில் வாடகைக்கார் சாரதியான அலெக்ஸாண்ட்ரொஸ் லெபெஸியோரிஸ் (42 வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிக்குள் பிரவேசிக்க முயன்ற இந்தக் காரை குடிவரவு பொலிஸார் மேலோட்டமாக சோதனையிட்ட போது பயணப் பெட்டிக்குள் இருந்த சிறுவன் தும்மவும் கடத்தல் நாடகம் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் நகர பொலிஸ் நிலைய பேச்சாளர் விபரிக்கையில், "இந்த எல்லைக் கடவையினூடாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. கடந்த காலங்களில் காரின் பின்பகுதி மற்றும் அடிப்பகுதிகளில் மறைந்த நிலையில் இத்தாலிக்குள் பிரவேசிக்க முயன்ற பலர் எம்மிடம் சிக்கியுள்ளனர். ஆனால், பயணப் பெட்டியில் மறைந்த நிலையில் ஒருவரை கண்டுபிடிப்பது இதுவே முதல் தடவையாகும்'' என்று கூறினார்.
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment