Re: [தமிழமுதம்] ரிக் வேதம்...................(நூல்.1..பாடல்..2)
விஞ்ஞானக் கவிஞர் ருத்ரா !
/////எங்கள் அறிவில்
நீங்கள் ஊடுருவியபோது
அவை விஞ்ஞானங்கள்.
நீங்கள் விருப்பமுடன்
விதிகளை
எங்களுக்குள் விதைக்கிறீர்கள்.
விதிகளை மீறும் விதிகளையும்
விதிகளை உடைக்கும் விதிகளையும்
மனிதப் பரிமாணத்தில் எங்களுக்கே
மீண்டும் பரிமாறுகிறீர்கள்.
நீங்கள் ஊடுருவியபோது
அவை விஞ்ஞானங்கள்.
நீங்கள் விருப்பமுடன்
விதிகளை
எங்களுக்குள் விதைக்கிறீர்கள்.
விதிகளை மீறும் விதிகளையும்
விதிகளை உடைக்கும் விதிகளையும்
மனிதப் பரிமாணத்தில் எங்களுக்கே
மீண்டும் பரிமாறுகிறீர்கள்.
அரிஸ்டாட்டிலில் இருந்து
நியூட்டன் ஐன்ஸ்டீன் வழியாக
இன்றைய ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்
மற்றும் ஸ்ட்ரிங்க் தியரியின்
எட்வர்டு விட்டன் வரை
அறிவின் துடிப்பொலிகளில்
உடுக்கையை அதிர அதிர
இசைத்துக்கொண்டிருப்பது
நீங்கள் தான்.
நியூட்டன் ஐன்ஸ்டீன் வழியாக
இன்றைய ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்
மற்றும் ஸ்ட்ரிங்க் தியரியின்
எட்வர்டு விட்டன் வரை
அறிவின் துடிப்பொலிகளில்
உடுக்கையை அதிர அதிர
இசைத்துக்கொண்டிருப்பது
நீங்கள் தான்.
விஞ்ஞான வேள்வி எரியட்டும்.
மெய்ஞானம்...நியூட்ரினோ மாதிரி.
நம் கைப்படவில்லை.
"பேர்யானிக் நம்பர்" புதிர்
இன்னும் அவிழவில்லை.
அது வரை அந்த சாவியை
சோமக்கடலில் தேடுவோம்.
அதனால் இந்த அஞ்ஞானங்களே
நம் விஞ்ஞானங்கள்.///
நம் கைப்படவில்லை.
"பேர்யானிக் நம்பர்" புதிர்
இன்னும் அவிழவில்லை.
அது வரை அந்த சாவியை
சோமக்கடலில் தேடுவோம்.
அதனால் இந்த அஞ்ஞானங்களே
நம் விஞ்ஞானங்கள்.///
ரிக் வேதத்தின் வயிற்றில்
உக்கிரமாய் உடுக்கடித்துக்
கக்கிய பிரளயத்தில்
திக்குத் தெரியும்
விரியும், திரியும், புரியா
விஞ்ஞானக் குழந்தை எப்படிப்
பிறந்தது ?
நியூட்டனும் நியூட்ரானும்
ஹிப்ஸ் போஸானும்
எப்படித் தோன்றின ?
விஞ்ஞான வேள்வியில் மூழ்கி
முத்தெடுக்கும் ருத்ரா !
மூச்சு விடும் மித்ரா !
நீச்சல் புரி பித்தனாய் !
அன்புடன்,
சி. ஜெயபார்தன்
அன்புடன்,
சி. ஜெயபார்தன்
+++++++++++++++++++
2010/2/18 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
ரிக் வேதம்
=====================================ருத்ரா
(நூல்.1..பாடல்..2)
(மொழி பெயர்ப்பு அல்ல இது.ஒளி பெயர்ப்பு இது)
இந்த பாடல்கள் எல்லாம் ரிஷி மதுசந்தஸ் வைஸ்வாமித்ரர்
பாடியது.காற்று மித்ரன் வருணன் ஆகிய கடவுளர்களைப்பாடியது)
1.
வாயவா யாஹி தர்ஸதேமே ஸோமா அரங்க்ரதாஹ்
தேஷாம் பாஹி ஸ்ருதி ஹவம்
2
வாய உக்தேபிர்ஜரந்தே தவாமச்சா ஜரிதாரஹ்
சுதஸோமா அஹர்விதஹ்
3
வாயோ தவ ப்ரபஞ்சதி தேனா ஜிகதி தாசுஷே
உரூச்சி சோமபிதயே
4
இந்த்ர வாயு இமே ஸுதா உப ப்ரயோபிரா கதம்
இந்தவோ வாமுசாந்தி ஹி
6
வாயவிந்த்ரஸ்ச ஸுன்வத் ஆ யாதமுப் நிஷ்க்ரதம்
மாஸ்வத்யா தியா நரா
7
மித்ரம் ஹுவே பூததக்ஷம் வருணம் ச ரிசாதஸம்
தியம் கர்தாச்சீம் ஸாதந்தா
8
ரதேன் மித்ராவருணாவ் ரதாவ்ரதாவ் ரதஸ்பர்சா
கரந்தும் பர்ஹந்தமாசாதே
9
கவி நோ மித்ராவருணா துவிஜாதா உருக்ஷயா
தக்ஷம் ததாதே அபஸம்
1
காற்று வெளியே போற்றி!
இந்த காற்று வெளியிடையேயும்
ஒரு ஊற்று வெளியாய்
உலாவரும்
மகிழ்வூட்டும்"சோமம்" பருகி
இந்த மக்களின் மூச்சில் எல்லாம்
கலையை தூவி விடு.
கனவை பாய விடு.
அழகிய காற்றே!
உன் காதுகள்
எங்கள் கண்களுக்கு தெரியவில்லை.
இந்த மயக்கக்களிப்பில்
உன் செவிமடல்கள்
எங்கள் குரல்களை
அணைத்துக்கொள்ளட்டும்.
2
பகல் பொழுதின்
வெயில் அருவிகூட
சோமாவின்
வெள்ளி ரசமாய்
தரையெங்கும்
இனிப்பை
பொங்கி பிரவகிக்கிறது.
பாடகர்களின்
நரம்புக்கூட்டங்கள் எல்லாம்
யாழ் மிழற்றி
வானம் முழுவதும்
தோரணங்கள் கட்டுகின்றன.
எதற்கு?
எங்கள் உயிர்க்காற்றே
எங்களை
உன் புல்லாங்குழலாக்கி
அந்த புனிதனின்
புகழ் இசைக்கத்தான்
3
காற்றே!
நீ இந்த கனவின் மயக்க ரசத்தை
நீர் பாய்ச்சுவது போல்
மூலை முடுக்கெல்லாம்
பாயவிட்டு
ஒரு மோனப்படலம் கொண்டு
போர்த்திவை.
தூரத்தே எங்கோ
கை கூப்பி வணங்கும்
உள்ளங்களுக்குள்ளும்
அந்த உள்ளொளியை
தாயினும் சாலப்பரிந்து
பால் ஊட்டு.
4
இதம் த்ரயம் என்றால்
இதோ இது தான் இயக்குகிறது
என்று பொருள்.
இதம் த்ரயம் "இந்த்ரம்" ஆயிற்று.
காற்றே இந்திரம் ஆகி
இயல்திறமாய் இன்பம் நிரவுகிறது.
சோம ரசம் தோய்ந்த வரிகளில்
நம் கடவுள்கள் கூட கிறங்கிப்போகலாம்.
அப்படி கிறங்கியவனே நம்
சோம சுந்தரன்.
நம்முள் உயிர்க்கிளர்ச்சியின்
கூத்து நடத்துகிறான்
விருப்பங்களே இங்கு
வேள்வியின் நெய் விழுதுகள்
சோமாத்துளிகள் மூலம்.
காற்றே இந்திரியமாய்
இந்திரியமே இன்பூங்காற்றாய்
இதோ இழைகின்றது.
5
உயிரை ஊற்றி ஊற்றி
மண்ணின் குளியல் இது.
உயிர்க்குவியலை வைத்து
நடத்தும் குடமுழக்கு இது.
ஓ!காற்றே!இந்திரமே!
நீங்கள்
எதை ஊதினாலும்
எதை ஊற்றினாலும்
கல்லும் முள்ளும் கூட
ஆத்மாவாய் பூத்துநிற்கிறது.
பெரும் அழிவு சக்திக்குள்
பெரும் ஆக்க சக்திகளும்
சதைப்பிடிப்பாய்
உயிர்க்குமிழியாய்
உருவம் காட்டுகின்றன!
கடு வேகம் கொண்டு
எங்கள் கண்களுக்குள்
விழித்து வாருங்கள்
6
காற்றே! இந்திரமே!
இதோ
சோம ரசம் பிழிபவனிடம்
ஓடிவாருங்கள்.
காற்றுக்குள் மாயமாய் இந்திரமும்
இந்திர வெளிக்குள் சுழலும் காற்றும்
வாருங்கள்!
கிண்ணம் நொதிக்கிறது.
உங்கள் உதட்டுச்சுவையில்
உலகம்
கின்னரம் முழக்கட்டும்.
வீரர்களே ஓடி வாருங்கள்.
மானுடப்பூ கொண்டு விரைக!
உங்கள் வில் அம்புகளில்
ரத்தம் சொட்ட சொட்ட
குங்குமம் இட்டு வழிபட்டது போதும்.
இந்த சோமப் பொழிவில்
காதல் மட்டுமே தெய்வம்.
இறைவனுக்கு மனிதன் மீது.
மனிதனுக்கு இறைவன் மீது.
7
இறைவனுக்கு எத்தனை முகம்?
நாம் பார்க்கும் பிம்பங்களின்
கண்ணாடி ஊற்று அவன்.
நண்பனாய் ஒரு முகம்.
அப்போது மித்ரன்!
நம் உள்ளுக்குள் மட்டுமே
பேசிக்கொள்ளத்தானே மித்ரன்.
நம் மன சாட்சியும் மித்ரனே!
இந்த அந்தரங்கம் புனிதமான சக்தி.
ஆற்றல்களின் ஆறு அது.
இன்னொரு முகம்
தண்ணீர்ப் பொழிவின்
வருணன்.
தடம் அழிக்கும்
பிரளயமும் அவனே.
ஜனனத்தையும்
மரணத்தையும்
பொழியும்
மொத்தக்குத்தகை அவனுக்கே!
மித்ரன் போற்றி!
வருணன் போற்றி!
(உட்குறிப்பாய் உள்ளே
ஒரு வரலாறு.
சிந்து வெளியின்
கருப்பு ஆரியர்களின்
தேவநகரத்தின் மீது
வெள்ளை மந்திரங்கள்
வீசிய
பகையின் முதல் பகடை இது.
"வானமே நீ கிழிந்து வா!
இந்த நகரங்களை
விழுங்கிக்கொண்டு போ!
வேள்வியில்
நெய் பெய்து நெய் பெய்து
கடைசியாய்
அது அவியுமுன்னே
ஆறுகள் உடையட்டும்".)
8
மித்ரனே போற்றி!
இந்திரனே போற்றி!
உன் இயற்பியல் விதிகள்
அற்புதமானவை!
ஆற்றல் மிகுந்தவை!
உங்கள் வரையறைகளே
அழகு மிக்கவை!
அஞ்ஞானங்கள்
அறிந்து கொள்ளும் வரை தான்.
எங்கள் அறிவில்
நீங்கள் ஊடுருவியபோது
அவை விஞ்ஞானங்கள்.
நீங்கள் விருப்பமுடன்
விதிகளை
எங்களுக்குள் விதைக்கிறீர்கள்.
விதிகளை மீறும் விதிகளையும்
விதிகளை உடைக்கும் விதிகளையும்
மனிதப்பரிமாணத்தில் எங்களுக்கே
மீண்டும் பரிமாறுகிறீர்கள்.
அரிஸ்டாட்டிலில் இருந்து
நியூட்டன் ஐன்ஸ்டீன் வழியாக
இன்றைய ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்
மற்றும் ஸ்ட்ரிங்க் தியரியின்
எட்வர்டு விட்டன் வரை
அறிவின் துடிப்பொலிகளில்
உடுக்கையை அதிர அதிர
இசைத்துக்கொண்டிருப்பது
நீங்கள் தான்.
பெயர்களையெல்லாம் உரித்துப்போடுங்கள்.
இனங்களையெல்லாம் உலுக்கியெறியுங்கள்.
அறிவு வேள்வியில்
"ரிக்கு"கள் வெறும் ஓசைகள் தான்.
மித்ரன் இந்திரன் என்பதையும்
ஒரு கணித சமன்பாடு ஆக்கிக்கொள்வோம்.
ஆத்திகம் ஆகுதியா? நாத்திகம் ஆகுதியா?
விஞ்ஞான வேள்வி எரியட்டும்.
மெய்ஞானம்...நியூட்ரினோ மாதிரி.
நம் கைப்படவில்லை.
"பேர்யானிக் நம்பர்" புதிர்
இன்னும் அவிழவில்லை.
அது வரை அந்த சாவியை
சோமக்கடலில் தேடுவோம்.
அதனால் இந்த அஞ்ஞானங்களே
நம் விஞ்ஞானங்கள்.
மித்ரன் போற்றி! இந்திரன் போற்றி!
.9
நம் சான்றோர்கள்.
நம் மூல விழுதுகள்.
மித்ரனும் இந்திரனும்.
பிறவிச்சல்லடையில்
பிறந்து பிறந்து
நம்மிடையே இழையூடி
நம் வாழ்விடமாய்
விரிந்து பரந்து இருக்கிறார்கள்.
பகுத்தறியும் பார்வையாய்
நம் பாடல்களின் வரிகளில்
ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உலக இயக்கங்கள்
இவர்கள் மூச்சுகள் தான்.
கண்ணுக்குத்தெரியாமல்
நமக்கு தோள் கொடுக்கும்
மித்ரனே போற்றி போற்றி!
நம் இதயத்துள் எல்லாம்
மின்னல் கொடியாகி
பூத்துக்கொண்டேயிருக்கும்
இந்திரனே போற்றி போற்றி!
==============================================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment