Monday, February 15, 2010

[அன்புடன்] Buzz ரீங்காரம்

கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்

குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றன

ரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றன

கணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனற்கேணி
பொங்குகிறது அளவற்று

அகர முதல
இணைய வெளியெல்லாம்
கூகுள் பகவான் ஆனது

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment