Thursday, February 18, 2010

[தமிழமுதம்] அறையை சுத்தமாக வைத்திருக்குமாறு கூறிய பெற்றோரை சுட்டுக்கொன்ற சிறுவன்




 
 
அறையைச் சுத்தமாக வைத்திருக்கும்படி நச்சரித்த தனது பெற்றோரை 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்ற சம்பவம் அமெரிக்க கொலராடோ மாநிலத்திலுள்ள பெயார்பிளே எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.தனது பெற்றோரின் நச்சரிப்பால் தான் இரு நாட்களாக சந்தோசமற்று இருந்ததாக தெரிவித்த ஜோன் கோடில் என்ற இந்தச் சிறுவன், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த தாயாரான ஜோனி ரெனேபர் ஜரை முதலில் சுட்டுக்கொன்றுள்ளான்.

இதனையடுத்து வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய தனது தந்தையான திரேசியை சுட்டுக்கொன்றுள்ளான்.

தனது பெற்றோரின் சடலங்கள் நிலத்தில் கிடக்க ஜோன் கோடில் இரவு முழுவதும் கணினி விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அதன் பின் பாடசாலைக்கு தந்தையின் வண்டியை செலுத்திச் சென்ற ஜோன் கோடில், அன்று முழுவதும் வகுப்பறையில் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் என்பதைக் கருத்திற்கொள்ளாமல் ஜோன் கோடில் மீது வயது வந்தவர்கள் மீது சுமத்தப்படுவதையொத்த கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 
 
 
 



--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment