Tuesday, February 16, 2010

Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?



2010/2/16 Jay Jayabarathan jayabarathans@gmail.com
 
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி. 
 
நீங்கள் புரிந்துகொண்டது இதுதான் என்றால் வருத்தப்
படவேண்டிய செய்திதான்! ஆங்கிலேயர்களால் அவர்கள்
நாட்டுக்கு அருகில்
உள்ள பாரிசு நகரத்தின் பெயரைக்கூட 
ஆங்கிலத்தில் எழுத இயலாது
(மூல ஒலிப்பைக் காட்டுமாறு) (பாரிசு நகரத்தின்  ஒலிப்பு
பாஃறீ என்பது போல இருக்கும்).
ஆங்கிலேயர்களை பல நூற்றாண்டுகளாக
ஆண்ட பிரான்சு நாட்டினரின் பிரான்சு
என்னும் நாட்டின் பெயரைக்கூட ஆங்கிலத்தில்
எழுத (மூல ஒலிப்பைத்தருமாறு) இயலாது.
வள்ளி, அழகப்பன், யாழினி, ஞானசம்பந்தன் முதலிய
பெயர்களைப் பற்றியோ ஆயிரக்கணக்கான சீன
மொழிப்பெயர்கள் பற்றியோ, இசுலாவிக் (Slavic), உருசிய
மொழிகளைப் பற்றியோ கூறவே வேண்டாம்.
எ.கா உருசிய நாட்டின்
தலைவராய் இருந்த  பிரழ்சினேவ் (Брежнев, Brezhnev)
ж ஐ தூய ஆங்கிலத்தில் எழுத இயலாது.
எந்தவொரு மொழியும் உலகில் உள்ள எல்லா
ஒலிகளையும் தங்கள் மொழி எழுத்துகளில் மட்டும்
எழுதி தங்கள் மொழியில் வழங்குதல்
இயலாது. தம்மொழிக்கு ஏற்றவாறு மாற்றியும்
திரித்தும்தான் பயன்படுத்துவர். சார்ச் பெர்னாட்சா
என்பதும் அப்படித்தான்.
 
புறப்பெயர்களை எடுத்து வழங்கும் முறைகள் பற்றி
முன்னமே கூறியுள்ளேன். ஆங்கிலத்தில்
எக்ஃசோனிம் (exonym) என்று வழங்கும் கருத்தைப் பற்றியும்
கூறினேன்.  (அக்டோபர் 12, 2009 அன்று தமிழ் மன்றம் குழுமத்தில்).
 
300 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானிய (Español)
மொழியில் Jesus என்னும் புகழ்பெற்ற பெயரைக்
கூட Hesoos (ஃகெசூச்˘) என்று ஒலிக்கின்றார்கள். ஏசுநாதர்
1.5 பி'ல்லியன் மக்கள் பின்பற்றும் மதத்தின் தோற்றுநர்.
எனினும் அவர்கள் ஆங்கிலேயர் போலவா சொல்கின்றனர்?
இடாய்சு (செருமன்) மொழியாளர் யெசுச்˘ என்கின்றனர்.
 
இதனை எல்லாம் புரிந்துகொள்ளவில்லை என்று
உறுதி செய்துள்ளீர்கள். மொழிகளுக்கு இடையேயான
தொடர்புகளை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை
என்று உறுதி செய்துள்ளீர்கள்.
 
காசுமீரம், மிசிசிப்பி, மிசௌரி போன்று பல முறை உங்கள்
பட்டியலுக்கு எழுதிக்காட்டிய பின்னரும் மீண்டும் மீண்டும்
பட்டியல் இடுவது உங்கள் வழக்கமாகிவிட்டது. மறந்து
விடுவீர்களோ என்னவோ!
 
செல்வா
 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment