Monday, February 15, 2010

[தமிழமுதம்] பாக்குத் தறிக்கும் ... - நாகைப்பட்டினத் தனிப்பாடல் - காளமேகம்

http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=165
"
``கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்`` என்று ஞான சம்பந்தர்
கூறியிருத்தலாலும், பாக்கு விளையாடிக்கொண்டிருந்த பாலகர்களை நோக்கிப்
பசியினால் காளமேகப்புலவர் `சோறு எங்கு விக்கும்` என்று கேட்டதற்கு,
அப்பாலகர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினார்கள். (விற்கும் -
என்பதைப் பேச்சுவழக்கில் விக்கும் எனக் கூறுதலுண்டு). உடனே புலவர்
கோபித்து அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு ``பாக்குத் தறித்து விளையாடும்
பாலகர்க்கு`` என்பது வரை சுவரில் எழுதி விட்டு, பசி தீர்ந்தபிறகு எஞ்சிய
பகுதியைப் பாடி முடிவு செய்வதாக வைத்துவிட்டுப் பசியாற்றிக் கொண்டு
அவ்விடம் வந்தபொழுது, அவர் எழுதியதற்குமேல் ``நாக்குத் தமிழுரைக்கும்
நன்னாகை`` என்று அவ்விளஞ்சிறார் எழுதியதைப் பார்த்து மதிமயங்கிச்
சென்றதாகத் தனிப்பாடல் ஒன்று இருக்கின்றது.
"

பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு
நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை -

இவ்வாறு தொடங்கும் தனிப்பாடலை "தனிப்பாடல் திரட்டு"
நூல்களில் பார்த்து இங்கே இடமுடியுமா? நன்றி.

நா. கணேசன்
http://nganesan.blogspot.com

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment