Wednesday, February 17, 2010

[தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

நண்பர்களே,
 

எழுத்துச் சீர்திருத்தங்கள் இப்போது நமது முதற்பணி அல்ல. 
 
நடைத் தமிழில், நல்ல படைப்புத் தமிழில் ஆயிரம் ஆயிரம் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்கள் ஆக்குவதே நமது முதற் கடமை.
 
 
பாரதியார் நமக்கெல்லாம் இரண்டு கட்டளைகள் இட்டுப் போயிருக்கார்!
 
முதற் கட்டளை:  'சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'.
 
இரண்டாம் கட்டளை:  'தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'
 
இவற்றின் உட்பொருள் என்ன ?
 
புதிய இந்தக் கணனி யுகத்தில் அகிலவலையில் உலக நாடுகள் யாவும் இணைக்கப் பட்டுள்ளதால் இப்பணிகளைச் செய்வது நமக்கு எளிது.  உலகத்தில் உள்ள உயர்ந்த கலைக் களஞ்சியங்களையும், விஞ்ஞானப் படைப்புகளையும் தமிழில் ஆக்குவதற்கு யாவரும் முற்படுமாறு நம்மை வேண்டுகிறார்.
 
அதே போல் தமிழில் படைக்கப் பட்டுள்ள அரிய காவியச் செல்வங்களை அன்னிய மொழிகளில் எழுதி, தமிழ் இலக்கியங்களை உலகோர் அறியும்படி முயலவேண்டும் என்று ஆணை யிடுகிறார்.
 
 
அன்புடன்
ஜெயபாரதன்
+++++++++++++++++++++++++++++++++++
2010/2/17 Govindasamy Thirunavukkarasu <gthirunavukkarasu@gmail.com>
தமிழனின் தலையெழுத்தே கேள்விக்குறியாக உள்ள இக்காலகட்டத்தில் தமிழ் எழுத்துக்கள் பற்றி பேசுகிறோம்.
தமிழன் தன்னுரிமையை நிலைநாட்டும் வரை  என்ன பேசியும் பலன் இருக்காது.வேந்தன் அரசு  சொல்வது சரிதான்.செ(ஜெ)ய பாரதன் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திக்கொள்ளட்டும்.ஆனால் எல்லாரும் அதை பயன் படுத்தவேண்டும் என்று உத்த்ரவிடாமல் இருந்தால் சரி.
கொஞ்சம் கவனத்தை திருப்பி, எழுதப் படிக்கவே தெரியாத கோடிக்கணக்கான எம் உழவர்களைப்பற்றி எண்ணுங்களேன்.
அன்புடன்
அரசு

2010/2/17 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>



16 பிப்ரவரி, 2010 11:31 pm அன்று, N. Ganesan <naa.ganesan@gmail.com> எழுதியது:





 
முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?

என் பரிந்துரை - using diacritics -
 
 
கணேசர்
எங்களுக்கு வயசாயிடுச்சு, இவற்றை எல்லாம் கைபழக்கம் ஆக்குவது எமக்கு ஒல்லாது
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment