Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
மதிப்புக்குரிய இராம்கி ஐயா,
தமிழகத்தின் தலைநகர் சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லுங்கள் தமிழ் எழுத்துக்களை எண்ணிக் கொள்ள !!!
தமிழை முதன்மையாகக் கொண்ட தி.மு.க அரசாங்கம் தானே கடந்த 45 ஆண்டுகள் தமிழ் நாட்டை உழுது பயிரிட்டு ஊட்டி வருகிறது !!!
தனித்தமிழ் நாடி அவர்கள் ஏன் போகவில்லை ?
தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள் வெளிவந்துள்ளன ?
ஜெயபாரதன்
++++++++++++++++
2010/2/16 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>
மதிப்புக்குரிய இராம்கி ஐயா,///அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப்பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டு மானால் தமிழ் பழகுங்கள், பிறசொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடிமுழுகாது. ஆனால் அதே வேதவாக்கு என்று கொள்ளாதீர்கள். அடிமைப்புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும். ////
மொழிச் சொற்களைத் திரிப்பது போல் விஞ்ஞானத்தை அப்படியே எழுதாமல் திரித்தால் மெய்ப்பாடுகள் சிதைந்து போகும்.காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் ஷாஜஹான், ஹிக்ஸ் போஸான், ஐன்ஸ்டைன் போன்ற பெயர்களைத் தூய தமிழில் நீங்கள் ஒலிக்கேற்ப எழுதாத வரையில் நாங்கள் கிரந்த எழுத்துக்கள் சிலவற்றைத் தேவைக்குப் பயன்படுத்துவோம்.கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திய பாரதியார், பாரதிதாசன், பண்டைத் தமிழ்ப் புலவர், தமிழைத் தொன்மொழி ஆக்கிய முதல்வர் மு. கருணாநிதி, கவிஞர் வைரமுத்து ஆகியோரெல்லாம் உங்கள் விதிப்படிப் பேதைகள்./////சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்
ஏதும் இல்லாமல்
சியார்ச் பெர்னாட்சா
என்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லை
ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்
சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும். ////இப்படித் தூய தமிழில் எழுதி அந்நியப் பெயர்களைத் தாறுமாறாகக் கேலி செய்பவர் மேதைகள் !!!!ஜெயபாரதன்+++++++++++++++++++++++++2010/2/15 iraamaki <poo@giasmd01.vsnl.net.in>தமிழில் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிப் பலமுறை சொல்லியிருந்தாலும், திருப்பித் திருப்பிச் சொல்லுவதில் சலிப்பு ஏற்பட்டாலும், இதைச் சொல்லவேண்டியிருக்கிறது. என்ன செய்வது? தூங்குவது போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித்தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச் சொல்லி எழுப்ப முடியாது.1. சங்கதம் போன்ற மொழிகளில் நகரி எழுத்தை ஆளும் போது ஓரெழுத்து ஓரொலி. Sound of a Nagari character = function of (Shape of the character). This is one to one correspondence. ஒன்றிற்கு ஒன்று என்னும் பொருத்தம் கொண்டது. தமிழ் போன்ற மொழிகளில் தமிழி எழுத்தை ஆளும் போது, ஓரெழுத்துப் பல்லொலி. அந்த எழுத்து மொழியில் (சொல்லில்) வரும் இடத்தையும், அண்மையில் வரும் மற்ற ஒலிகளையும் பொறுத்து குறிப்பிட எழுத்தின் ஒலி மாறும். Sound of a Tamizi character = function of (Shape of the character, the place of occurrence in a word, nearby sounds). This is one to many correspondence. ஒன்றிற்குப் பல என்னும் பொருத்தம் கொண்டது. பார்ப்பதற்குக் கடினம் போல் தோற்றினாலும், பழக்கத்தில் எந்தக் குழப்பமும் இல்லாது குறைந்த எழுத்துக்களில் பல்லொலிகளை எழுப்பவைக்கும் முறை.நகரி/சங்கதம் போன்ற கட்டகங்களின் (systems) அடிப்படை தமிழி/தமிழ் போன்ற கட்டகங்களின் அடிப்படையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கிரந்த எழுத்து வேண்டுவோர் நகரி/சங்கதக் கட்டகத்தைத் தமிழி/தமிழ் கட்டகத்துள் புகுத்த நினைக்கிறார்கள். இது வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் முயன்று கொண்டிருந்தால் பை என்னும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல் தெரிந்தவர்கள் இதைச் செய்ய முயலமாட்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழிய மொழிகள் முதலில் (இன்றும் பலவகையிலும்) தமிழி/தமிழ் அடிப்படையையே கொண்டிருந்தன. அவற்றை வலிந்து மாற்றி எல்லா மொழிகளையும் சங்கதப் (சங்கடப்) படுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் தப்பியது தமிழ் மட்டுமே. அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாக இருக்கிறது. குலைப்பவர்கள் வெறியர்களா? குலையாது காப்பவர்கள் வெறியர்களா?2. கிரந்தம் தவிர்த்து எழுதினால், இவர்களின் முதல் தாக்குதல் "பொருள் மாறிப் போய்விடும்" என்பதாகும். "இல்லை ஐயா, பொருள் சற்றும் குறையாமற் சொல்லத் தமிழ்ச்சொல் இருக்கிறது" என்றால், "அது பழையசொல், பண்டிதத் தமிழ்" என்று நொள்ளை சொல்லுவார்கள். மற்ற மொழிகளில் புதுச்சொற்கள் உருவாகும் நடைமுறையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். தமிழில் மட்டும் குறை கண்டுகொண்டே இருப்பார்கள். இவர்கள் தமிழ் புதுமையாவதை விரும்பாதவர்கள். மாறாகக் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம்" என்று களியாட்டப் புலங்களில் மட்டுமே தமிழ் நின்று, கற்படிமம் (fossil) ஆவதையே விரும்புகிறார்கள். மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் கலந்து ஒரு கலப்பின மொழி (bastard language) உருவாவதையே வேண்டி நிற்கிறார்கள். இவர்களின் விழைவு தமிங்கிலம் தான். தமிழ் அல்ல.3. இவர்களின் இரண்டாவது தாக்குதல் "கிரந்தம் தவிர்த்தால் ஒலிப்பு மாறிவிடும்" என்பதாகும். ஏதோ உலகமெங்கும் உள்ளோர் ஒலிப்பு மாறாமல் பிறமொழிச் சொற்களை ஒலிப்பதாகவும், தமிழர் மட்டுமே தவறு செய்வதாகவும் இவர்கள் அங்கலாய்ப்பார்கள். ஒரு பத்து நாட்களுக்கு முன் கோலலம்பூர், சிங்கை, பினாங் போய்வந்தேன். கோலாலம்பூரில் ஒரு மீயங்காடியை (Hyper market) Pasar besar என்று மலாய் மொழியில் எழுதியிருந்தார்கள். நம்மூர்க்காரர்கள் மூலம் தான் பசார் என்ற சொல்லை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அந்தச் சகரமே அதை இனங் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அதுவும் தென்பாண்டியொலிப்பை அப்படியே காட்டிவிடுகிறது.பசாரின் மூலம் ஓர் அரபிச் சொல்; சங்க காலத்தில் இறக்குமதியானது. பந்தர் என்ற சந்தை/அங்காடி ஊரே சேரலத்தில் முசிறிக்கு அருகில் இருந்திருக்கிறது பந்தர் என்ற சொல் பாரசீகத்தும் பரவியது. இன்றும் ஒரு பெரிய துறைமுகம் ஈரானில் பந்தர் அப்பாசு என்று இருக்கிறது. பந்தர்>பந்தார்>பஞ்சார்>பசார் என்ற திரிவில் அது பசார் ஆனது. வடக்கே பஞ்சார் என்பது பஜார் என்று ஆனது. நாம் பசார் என்று அந்தப் பிறமொழிச் சொல்லை எழுதினால் அதை நக்கலடிக்கும், நையாண்டியடிக்கும் இந்தப் பெருகபதிகள் (ப்ரஹஸ்பதிகள்) மலாய்க்காரரிடம் போய்ச் சொல்லுவது தானே? "அதைப் பசார் என்று எழுதாதீர்கள், பஜார் என்று எழுதுங்கள்" என்று முறையிடவேண்டியது தானே? இத்தனைக்கும் மலாய் மொழியில் ஜகரம் இருக்கிறது. ஆனாலும் மலாய்க்காரர்கள் சற்றும் கவலைப்[படாமல், வெட்கப்படாமல் பசார் என்று எழுதுகிறார்கள்.Besar என்பது நம்முடைய பெரியது என்பதோடு தொடர்பு கொண்டது. [அந்தச் சொற்பிறப்பை இங்கு நான் விளக்கவில்லை.] இந்த இடுக்கைக்குத் தேவையானதோடு நிறுத்திக் கொள்ளுவோம். ஒவ்வொரு மொழியினரும் வேற்றுமொழிச் சொற்களைத் தம் இயல்பிற்கெனத் திருத்திக் கொண்டே தான் வந்திருக்கிறார்கள். புழங்குகிறார்கள். அது ஒன்றும் தவறே அல்ல. தாழ்வு மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத் தெரியாது. [பெருமிதங் கொண்ட ஆப்பிரிக்கக் கருப்[பருக்குக் கருப்பு தவறாகத் தோன்றவில்லை. பெருமிதம் குலைந்து 400 ஆண்டு அடிமையாகிப் போய்ப் பின் உயிர்த்தெழுந்த அமெரிக்கக் கருப்பருக்கு கருப்பை மறைக்க வண்ணம் வண்டிவண்டியாகத் தேவைப் படுகிறது. அது கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கிறார்கள். கருப்பு தான் போகமாட்டேன் என்கிறது.]4. இவர்களின் மூன்றாம் தாக்குதல் "இயற்பெயரில் எப்படிக் கிரந்தம் தவிர்ப்பது? மாற்றார் நம்மைப் பார்த்துச் சிரிப்பாரே?" மற்றவன் இப்படி நினைக்கிறானா என்று இவர்கள் எண்ணுவதே இல்லை. அவர்களுக்குப் பெருமிதம் இருக்கிறது, கவலையே படாமல் தோல்காப்பியனாக்குகிறார்கள், அலகப்பனாக்குகிறார்கள், ஆருமுகம் ஆக்குகிறார்கள். நமக்கோ அடிமையூற்று இன்னும் அடங்கவில்லை. கூனிக் குறுகி "பழுப்பு பதவிசில்" (Brown sahib) ஒளிரப் பார்க்கிறோம். [Here Tamils and dogs are not allowed] என்ற வாசகம் எங்கு நம் மனத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. கருப்பு/பழுப்பு மெய்யில் வெண்பொடி பூசி நம் நிறத்தை அழித்துக் கொள்ளத் துடிக்கிறோம்.] [அதே பொழுது, வளரும் நாடான மலேசியாவில் மகாதீர் முகமது என்பவர் இருந்து பெருமிதப் பாடத்தை மலாய்க்காரர்களுக்கு விடாது கற்றுக் கொடுத்திருக்கிறார்.] நமக்கும் பெருமிதத்திற்கும் தான் காத தொலைவு. இன்றும் இருக்கிறது.5. இவர்களின் ஐந்தாம் தாக்குதல் "கிரந்தம் தவிர்த்தால் அறிவியல் எப்படிக் கற்பது? நாம் தனிமைப் படுவோமே?" மண்ணாங்கட்டி. இப்பொழுது மட்டும் தனிமைப் படாமல் இருக்கிறோமா என்ன? அதுதான் பார்த்தோமே? ஒரு நூறாயிரத்தைக் கொன்றதற்கு இந்த உலகம் கவலைப்பட்டதா? தனித்துத் தானே கிடந்தோம்? தமிழர் அழிந்தால் (உயிருடனோ, அன்றி மனத்தாலோ அழிந்தால்) நல்லது என்றுதானே உலகம் நினைக்கிறது?அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப்பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் பழகுங்கள், பிறசொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடிமுழுகாது. ஆனால் அதே வேதவாக்கு என்று கொள்ளாதீர்கள். அடிமைப்புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும்.என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் "அடிமையாய் இருப்பதே சுகம்" என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக் கொள்ளமுடியாது. சரியாகத் தான் பாரதி சொன்னான்."சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ?"பேதையரைக் காணும் வேதனையுடன்,
இராம.கி.----- Original Message -----From: Mani ManivannanTo: tamilmanramSent: Monday, February 15, 2010 11:14 PMSubject: Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?எந்த ஒரு சொல்லையும் நாம், நம் மொழியில், நம் உணர்ந்து எழுதும் வரை அது வேற்றுக் கருத்தாக, நமக்கு அந்நியப்பட்டுதான் இருக்கும்.சீனர்கள் இதை உணர்ந்தவர்கள். தன்னம்பிக்கை உள்ள மக்கள் இரவல் சொற்களை நம்பியிருக்கத் தேவையில்லை.ஆங்கிலமும் முதலில் இலத்தீன், கிரேக்க வேர்ச் சொற்களை நம்பிக்கொண்டுதான் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க வல்லரசு மேலெழுந்த பின்னரே கலைச்சொற்களைத் தம் மொழியிலேயே படைக்கும் தன்னம்பிக்கை அதற்கு வந்தது. இந்த "பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப், பிகாடா" எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்திருந்தால் கிரேக்க, இலத்தீனப் பெயர்களோடுதாம் வந்திருக்கும்.திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு பேரா. செல்வகுமார் எழுதியது புரியவில்லை போலிருக்கிறது.ஹீலியம் என்ற தனிமத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்கள், சூரிய நிறமாலையிலிருந்து இது கண்டு பிடிக்கப் பட்டதால், இதைச் சூரியன் என்ற பொருள் கொண்ட இலத்தீன வேரான ஹீலியோஸ் என்பதுடன் -இயம் என்ற பின்னொட்டைச் சேர்த்து ஹீலியம் என்ற பெயர் வைத்தார்கள்.[New Latin, from helio- + -ium; named from its having first been detected in the solar spectrum] (http://www.thefreedictionary.com/helium )இத்தாலிய மொழி பண்டைய இலத்தீனத்திலிருந்து தோன்றிய தற்கால மொழி. இரண்டுமே ஒரே நாட்டில் வெவ்வேறு காலத்தில் பேசப் பட்ட மொழிகள். இத்தாலிய மொழி இலத்தீனின் சொந்த மகள். ஆங்கிலம் இலத்தீனின் தூரத்து உறவின் ஒன்று விட்ட மருமகள். இலத்தீன வேருக்குச் சொந்தம் கொண்டாடுவதில் ஆங்கிலத்தைவிட இத்தாலிய மொழிக்கு உரிமை கூடுதல். இதே போல் பண்டைய இலத்தீனமும் பண்டைய கிரேக்க மொழிக்கு நெருங்கியது. கிரேக்க வேரானா ஹீலியோஸ் என்ற சொல்லும் இலத்தீனத்துக்கு நெருங்கியதுதான்.எனவே, இத்தனை உரிமைகள் இருக்கும்போது இத்தாலியர்கள் ஹீலியம் என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட தனிமத்துக்குத் தங்கள் மொழியில் என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று நினைப்பீர்கள்?ஜெயபாரதன் இத்தாலியராகப் பிறந்திருந்திருந்தால், "டேய், ஆங்கிலம் உலகப் பொதுமொழி, அறிவியல் மொழி, அது மட்டுமல்ல, அது இந்தத் தனிமத்துக்கு நம் தாய்மொழியான இலத்தீன வேர்ச்சொல்லிலிருந்துதான் பெயர் வைத்திருக்கிறார்கள், அதை அப்படியே எடுத்துக் கொள்ளடா" என்று சொல்லியிருப்பார்.ஆனால் பாருங்கள், இந்த இத்தாலிக்காரர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை.அவர்கள் தங்கள் தாய்மொழியில் துணிந்து ஈலியோ (http://it.wikipedia.org/wiki/Elio ) என்று இந்தத் தனிமத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.செல்வாவும் அதைத்தான் சொல்கிறார்.தமிழா, உன் மொழியில், உனக்குப் புரியும் வகையில், உன்னால் சொல்ல முடிந்த சொல்லை வைத்து இந்தத் தனிமத்தை அழை. வேற்று மொழியில் பெயர் வைத்து அழைத்தால், அது உனக்கு என்றும் அந்நியமாகவே போய்விடும்.இன்டர்நெட் ஒரு மிரட்டலான அந்நியச் சொல். இணையம் தமிழின் உள்ளத்திலே குடிபுகுந்த, தமிழனைத் தயங்காமல் வா என்று அன்புடன் அழைக்கும் சொல்.ஈ-மெயில், கொசு மெயில் எல்லாம் மேல் தட்டுகளின் சொற்கள்.மின்னஞ்சல் கொஞ்சுதமிழ்ச் சொல். இதில் மிரட்டல் இல்லை, தயக்கம் இல்லை.பிலாக், ப்ளாக், புளோக், புலோக் எல்லாம் சூ மந்திரக்காளிச் சொற்கள்.வலைப்பூ, வலைப்பதிவு எல்லாம் நம் சொற்கள்.எப்போது நம் மொழியில் பெயர் வைக்கத் துணிகிறோமோ, அப்போதே அந்நியக் கருத்துகளை உள்வாங்கித் தன்வயப்படுத்தி தம் ஆளுகைக்குள் கொண்டு வருகிறோம்.இந்தக் கருத்துகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.கூகிள் பஸ்ஸ் என்று நீங்கள் எழுதினால் எனக்கு Google Puss என்றுதான் படிக்க வருகிறது. அதன் பொருளே திரிந்து விடும்.கூகிள் பஜ்ஸ், கூகிள் பஸ்ஜ் என்றெல்லாம் எழுதுவது நல்ல நகைச்சுவை. அப்படியெல்லாம் எழுதினால் buzz என்ற ஒலியெல்லாம் வராது. இதெல்லாம் வலிந்து கட்டப் படும் சொற்கள். பெரும்பாலான தமிழர்களால் பஜ்ஸ் என்பதில் ஒட்டி வரும் கிரந்தங்களைப் படிக்க முடியாது. பஜுசு, பசுசு, பழசு என்று வேண்டுமானால் படிப்பார்கள்.ஓ, இதுவே நன்றாக இருக்கிறதே!புத்தம்புதிய ரீங்காரம், என்ற பொருளில் கூகிள் கொண்டுவந்த சொல்லை, கூகிள் பழசு என்று நையாண்டி அடிக்கலாம்.அப்படி நையாண்டி செய்தாலாவது இனிமேல் பெயர் வைக்கும்போது கூகிள் சற்றுக் கவனத்துடன் ஆங்கிலச் சொற்களை உலக மொழிகள் எல்லாவற்றிலும் உச்சரிக்க முடியும் என்ற திமிர் இல்லாமல் சற்றுத் தன்னடக்கத்துடன் பெயர் வைப்பார்கள்.2010/2/15 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>--
நண்பர் செல்வா ஹீலியம் என்று ஆங்கிலத்தில் எழுத மாட்டாராம். ஆனால் இத்தாலிய மொழியில் ஈலியோ வென்று எழுதுவாராம்.விஞ்ஞானத்தைத் தமிழில் மேம்படுத்த ஆங்கிலத்தின் உதவி மிக அவசியம். கூடியவரை ஆங்கில விஞ்ஞானப் பெயர்களைப் அப்படியே தமிழில் எழுவது மேற்படிப்புக்கு வசதி செய்வது.நமது கல்லூரி மேற்படிப்பு விஞ்ஞானம் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் மாணவருக்கு ஹீலியம் என்று கீழ் வகுப்பில் படித்தால் மிக ஏதுவாக இருக்கும்.கலந்து விட்ட மற்ற மொழிச் சேர்க்கைகளை (சமஸ்கிருதம், ஆங்கிலம்) முற்றிலும் விரும்பாது அவற்றின் மீது வெறுப்புக் கொள்வது தமிழ் மொழியை ஒரு போதும் வளர்க்காது.ஜெயபாரதன்+++++++++++++++++++++++++++2010/2/15 செல்வன் <holyape@gmail.com>
பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப்,பிகாடா இப்படி ஆயிரகணகான சோஷொயல் மீடியா நெட்வர்க் வெப்சைட்டுகள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன.ஒவ்வொன்றையும் ரீங்காரம், முகநூல் என மொழிபெயர்த்துகொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. பேசுபுகு, பச்சு என எழுதி கொள்வது தனி தமிழ் ஆர்வலர் விருப்பம். நான் பேஸ்புக், பஸ்ஸ் என தான் எழுத போகிறேன்.
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment