Monday, February 15, 2010

[தமிழமுதம்] ஆழ் கடலில் 48 மணி நேரம் தங்கியிருந்து உலக சாதனை


 
 




கடலில் 20 அடி ஆழத்தில் 48 மணித்தியாலங்கள் 9 நிமிடங்கள் 17 செக்கன்கள் தங்கியிருந்து பிரித்தானியாவைச் சேர்ந்த வில் குட்மான் (32 வயது) உலக சாதனை படைத்துள்ளார்.

இந்தோனேசிய தீவான லொம்பொக்கிற்கு அருகே கடலில் மூழ்கியிருந்தே அவர் இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்.

கடலின் ஆழத்தில் உலோகக் கூண்டொன்றில் இருந்த அவருக்குத் தேவையான ஒட்சிசன் வாயுவை அவருக்கு உதவியாக செயற்பட்ட குழுவினர் உடனுக்குடன் வழங்கியதுடன் அவர் உண்பதற்கு தேவையான தானியங்களையும் குழாயினூடாக விநியோகித்தனர்.

இந்த சாதனை முயற்சியின் போது உறங்காமல் இருப்பதற்காக அவர் திரைப்படங்களை பார்த்து இரசித்தார்.

நீல் நெடு நேரம் இருந்ததால் அவரது கைகள் வீங்கியதுடன் சுருங்கிய தோல் உதிர ஆரம்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடலின் அடியில் கழித்த முதல் 24 மணி நேரம் சொர்க்கமாகத் தோன்றியதாகத் தெரிவித்த குட்மான், இறுதிக் கட்டம் பெரும் சிரமமிக்கதாக அமைந்ததாகக் கூறினார்.


 
 
 
 



--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment