[தமிழமுதம்] பிரபல எழுத்தாளர் மரணம்
உலகப் பிரபல பிரித்தானிய மர்ம நாவல் எழுத்தாளர் டிக் பிரான்சிஸ் தனது 89 ஆவது வயதில் மரணமானார்.
இவர் தனது வாழ் நாளில் விற்பனையில் சாதனை படைத்த 40 க்கு மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.
இவர் முதன்முதலாக 1957 ஆம் ஆண்டில் தனது சுயசரிதை நூலை எழுதி வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து 5 வருடங்கள் கழித்து தனது முதலாவது திகில் நாவலான "டெட் செர்ட்' இனை வெளியிட்டார்.
அவர் அண்மையில் தனது மகன் பீலிக்ஸுடன் இணைந்து 'டெட் ஹீட் அன்ட் சில்க்ஸ்' என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.
பிரான்சிஸால் எழுதப்பட்ட சில நாவல்கள் உலகளாவிய ரீதியில் 60 மில்லியன் பிரதிகள் வரை விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
மேலும் அவரது நூல்கள் சில 20 மொழிகளில் வெளியிடப்பட்டன. அவர் 1996 ஆம் ஆண்டு மர்ம கதை எழுத்தாளர் சங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் 'சன்டே எக்ஸ்பிரஸ்' உள்ளடங்களான பல பத்திரிகைகளுக்காக பணியாற்றியுள்ளார்.
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment