[அன்புடன்] பூமியதிர்ச்சி தாக்கி சில வாரங்களின் பின் இடிபாடுகளின் கீழிருந்து உயிருடன் மீ...
ஹெயிட்டியை 7.0 ரிச்டர் பூமியதிர்ச்சி தாக்கி இரு வாரங்களின் பின் இடிபாடுகளின் கீழிருந்து நபரொருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஹெயிட்டியை தாக்கிய பூமியதிர்ச்சியால் 200,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
ஹெயிட்டியைத் தாக்கிய பாரிய பூமியதிர்ச்சியையடுத்து சுமார் 50 பூமியதிர்ச்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட றிகோடிபிறிவெல்லின் காலொன்று உடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இடிந்து விழுந்த கடைக் கட்டிடமொன்றின் கீழ் சிக்கியிருந்த அவர், பூமியதிர்ச்சி இடம்பெற்று 12 நாட்களின் பின் மேற்படி கடையை கொள்ளையடிக்க வந்த குழுவினரால் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்தகுழுவினர் அவரை இடிபாடுகளிலிருந்து வெளியே தூக்கி வைத்துவிட்டு கொள்ளையடித்த பொருட்களுடன் சென்றுள்ளனர்.
இதனையடுத்து இடம்பெற்ற சிறிய அளவான பூமியதிர்ச்சிகளின் போது றிகோ டிபிறிவெல் மீளவும் இடிபாடுகளின் கீழ் சிக்கிக் கொண்டார்.
இந்நிலையில் அபூர்வமான முறையில் உயிர் தப்பியுள்ள அவர், நீண்ட காலம் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்து உயிர் பிழைத்தவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
பூமியதிர்ச்சியில் சிக்கியுள்ளவர்களை மீண்டும் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக ஹெயிட்டிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்த நிலையிலேயே றிகோ டிபிறிவெல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
பூமியதிர்ச்சியையடுத்து ஹெயிட்டி தலைநகரிலிருந்து இதுவரை 130க்கும் மேற்பட்டவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மேலும் பலர் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சியால் இலட்சக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்து அகதிகளாகியுள்ள நிலையில் அவர்களுக்குத் தேவையான மேலதிக கூடாரங்களையும் இருப்பிட வசதிகளையும் வழங்கி உதவுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரேன் பிறீவால் உதவி வழங்கும் நாடுகளைக் கோரியுள்ளார்.
மேற்படி பூமியதிர்ச்சியில் ஜனாதிபதியின் இல்லம் சேதமடைந்துள்ள நிலையில், அவர் அந்த இல்லத்தின் வளவில் கூடாரமொன்றை அமைத்து குடியிருக்கத் திட்டமிட்டுள்ளார்.
--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment