Monday, February 1, 2010

[அன்புடன்] செவிகளின் வழியே ஒரு செவ்விய ஆட்சி..............ருத்ரா

செவிகளின் வழியே ஒரு செவ்விய ஆட்சி..............ருத்ரா
======================================================
(உலக இசை நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு
பாராட்டு மடல்)

"கல் பொருது இரங்கும்
மல்லல் பேர் யாற்று
புணை வழிப்படூஉம்..."

வாழ்க்கை என்பது
கரடு முரடு ஆற்றுவழியில்
படகு வலிப்பது...

"தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும்
அவற்றோர் அன்ன‌
யாதும் ஊரே..யாவரும் கேளிர் "

ஆம் யாவரும் இதை கேளீர்
என செவிகுளிர வைத்த செம்மலே!

மனிதனின்
காதும் கண்ணும் வாயும்
க‌ணினிக்காடுக‌ள் ஆகிப்போன‌தால்
அந்த‌ க‌ணிய‌ன் பூங்குன்ற‌ன் கூட‌
க‌ணினிய‌ன் பூங்குன்ற‌னாய்
க‌ணினியிலே
உன‌க்கு
வாழ்த்துச்செய்யுள்
வார்த்திருப்பான்.

சிக்க‌ல் நிறைந்த‌ க‌ணினியின்
உன் செல்ல‌ப்புனைக‌ளாய்
இந்த‌ ராக‌ங்க‌ள்
எங்க‌ள்
மார் மீதும் மடி மீதும்
மௌன‌ இனிமையை
இசையின் அருவியாக்கி
இழைந்தோடுகின்ற‌ன‌


பண்டிட் ரவி சங்கர் முதல்..இன்று
ர‌ஹ்மான் வ‌ரை
ந‌ம் பார‌த‌ "ப‌ண்" "பாட்டை"
மேலை உல‌க‌மும்
பாராட்டிய‌ பெருமைக‌ண்டு
இந்திய‌த்த‌மிழ் அன்னை
இத‌ய‌ம் கனிந்து வாழ்த்துகின்றாள்
அமெரிக்க கிராமி விருதுகள்
என்பவை
மனிதனின் குறுகிய
சுவர்களையெல்லாம்
தாண்டிய
விண்வெளியின்
வெள்ளிச்சுட‌ர் போன்ற‌
மானுட‌ம் பூத்த‌ ம‌க‌த்தான‌ விருது.

ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளே !
கனிந்து வாழ்த்துகின்றாள்
அமெரிக்க கிராமி விருதுகள்
என்பவை
மனிதனின் குறுகிய
சுவர்களையெல்லாம்
தாண்டிய
விண்வெளியின்
வெள்ளிச்சுட‌ர் போன்ற‌
மானுட‌ம் பூத்த‌ ம‌க‌த்தான‌ விருது.

ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளே
கிராமியின் செவிகளுக்குள்
நுழைவது என்பது
இசை அடர்ந்த
இனிய காடு மலை யாவும்
தாண்டுவது அல்லவா,
அவ்வளவு எளிதல்லவே அது !

இறைவன் மிகப்பெரியவன்
அவ‌னையும் விட‌ப்பெரிய‌து
அவ‌ன‌து க‌ருணை!

எப்போதுமே
உன் உள்ள‌த்துள் நீ
மெட்டு அமைத்து வைத்திருக்கும்
இசை மொட்டுக‌ள்
இவை தானே !

இது
உன் கடின உழைப்பு.
உன் வலிமையான முயற்சி.
என நாங்கள் சொன்னாலும்

எல்லாப்புகழும் இறைவனுக்கே
என்று
கீ போர்டின் விசைப்பலகையையே
புனித குரானின் குரல் தவழும்
சங்கப்பலகையாக்கி
தமிழ்ப்பண் கூட்டினாய் !

ஆத்திகத்துக்கும்
நாத்திகத்துக்கும்
அப்பாற்பட்ட‌
உன் தன்னடக்கம்
நாகரிகத்தின் புன்முறுவல்.
அந்த பூவின் முறுவலுக்கும்
எங்கள் வணக்கங்கள்.

உன் இசையில்
சிறகு அசைத்துப்ப‌ற‌க்கும்
க‌ண்ணுக்குத் தெரியாத‌
அந்த‌
"உல‌க‌ ச‌மாதானப் புறாக்க‌ள்"
இன்னும்
உய‌ர்ந்த‌ உய‌ர்ந்த‌
உல‌க‌ மானுட‌ ம‌ல‌ர்ச்சியின்
விருதுக‌ள் நோக்கி
ப‌றக்க‌ட்டும்.ப‌ற‌க்க‌ட்டும்
ப‌ற‌ந்து கொண்டே இருக்க‌ட்டும்.

======================================================ருத்ரா

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment