Friday, February 5, 2010

[அன்புடன்] முத‌ல் மானிட‌ப்பூ

முத‌ல் மானிட‌ப்பூ
================================================ருத்ரா
 

இந்த மூதாட்டியின் முகத்தைப் பாருங்கள்.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது.
இந்த ஆதிதிராவிட மூதாட்டி
எந்த குப்பத்தைச்சேர்ந்தவர்?
தெரியவில்லையே!
நொச்சிக்குப்ப‌மா? குயில் தோப்பா?
ராம‌ காவிய‌க்கார‌ர்க‌ள்
சொல்வார்க‌ள்
எங்க‌ள் ராம‌னின் கூரிய‌ மூக்கையும்
சிவ‌ந்த‌(வெள்ளை)மேனியையும்
ர‌வி வ‌ர்மா தான்
அழ‌காய் ஓவிய‌ம் தீட்டிவிட்டானே!
சூர்ப்ப‌ன‌கைக்கு தான்
இன்னும் ப‌ட‌ம் கிடைக்க‌வில்லை!
இதோ கிடைத்து விட்ட‌தே
என்று துள்ளிக்குதிப்பான்.
ஆனால் இது
"க‌ல் தோன்றி ம‌ண் தோன்றா
கால‌த்தேயும் முன் தோன்றிய‌"
மூத்த‌ குடியின்
ஒரு மானிட‌ப்பூ.
அந்த‌மான் தீவுக‌ளில்
ப‌த்துக்கும் மேற்ப‌ட்ட‌
ப‌ழ‌ங்குடியின‌ர்க‌ளில்
"போ" இன‌த்தை சேர்ந்த‌வ‌ர் இவ‌ர்.
65000 ஆண்டுக‌ளுக்கும் முந்திய‌
இன‌த்தின் க‌டைசி
உயிர்ச்சொட்டு இவ‌ர்.
போவா சீனிய‌ர் எனும்
இவ‌ருக்கு வ‌ய‌து 85.
இப்போது இற‌ந்து விட்டார்.
உல‌க‌த்தில் உள்ள‌
ப‌ழ‌ங்குடியின‌ருக்கு எல்லாம்
ந‌ம் இந்திய‌ப்பெய‌ரையே
சூட்டிப்பார்த்தால்
இவ‌ரும் ஒரு ஆதிதிராவிட‌ரே!
இந்த அம்மையாருக்கு
நம் நெஞ்சு கனத்த உணர்வுகளோடு
கண்ணீர் சொரியும் அஞ்சலிகள்!
ச‌ப்பை மூக்கும்
க‌றுத்த‌ நிற‌மும் தானே
அந்த‌ "அக் மார்க்" முத்திரை.
ஆக்கிர‌மிக்க‌ வ‌ந்த
வெள்ளை ஆரிய‌ம்
வேண்டுமானால்
"பிளாஸ்டிக் ச‌ர்ஜ‌ரி" செய்து
இவ‌ர்க‌ள்
நேர‌டியாக வான‌த்திலிருந்து
பிர‌ம்மா பிர‌ச‌வித்த‌
புத்திர‌ர்க‌ள் என்று
புராண‌ம் எழுதிக்கொள்ள‌ட்டும்.
இந்த‌
முதல் மனிதப்பூ
இறுதிப்பூவாய்
இற்று விழுந்ததில்
என் நெஞ்சு நொறுங்குகிறது.
அந்த ஆழமான நீர்ப்படலம்
அவள் ஒலித்துவிட்டுப்போன‌
ஒரு "ஒளித்தொகை"ப்பாடல்
எங்கள் சங்கப்பலகையில
என்றும் வீற்றிருக்கும்.
அன்று ஒரு "குற‌ம‌க‌ள் இள‌ எயினி"
செய்யுள் த‌ந்தாள்.
இன்றும் இப்போது
அவ‌ள் எதிரொலிக்கின்றாள்.
ஒலிக்கு ர‌த்த‌ம் இல்லை. ச‌தை இல்லை.
அத‌னால் இற‌ப்பும் இல்லை.
அந்த‌ க‌ருங்குயில்
கூவிக்கொண்டே இருக்க‌ட்டும்.
 
அன்புடன்
"ருத்ரா"


 

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment