[தமிழமுதம்] கூகுள் buzz - கூகுளின் அடுத்த அதிரடி
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
Google Buzz பாவிக்கிறீங்களோ???
| |||
Pathivu Toolbar ©2010thamizmanam.com | |||
Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.
கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.
கூகிள் Buzz என்றால் என்ன?
கூகிள் Buzz எனப் படுவது Twitter, FaceBook, Friendfeed போன்றவற்றை பிரதி செய்து (அதாங்க, காப்பி அடிச்சு) ஜிமெயில், கூகிள் ரீடர் போன்ற கூகிளின் சேவைகளுக்குள் உள்ளமைக்கப்பட்ட ஒரு சேவையே ஆகும்.
உங்களுக்கு ட்விட்டர் பரிச்சயம் என்றால் கூகிள் பஸ் பற்றிப் புரிவதற்கு அவ்வளவு நேரம் ஆகாது. நீங்கள் இணையத்தில் பார்க்கும் விடையம் ஒன்றையோ அல்லது உங்கள் மனதில் தோன்றும் ஒரு கருத்தையோ நீங்கள் வெளியிட அதில் மற்றவர்கள் பதில் போட்டு தங்கள் கருத்தையும் தெரிவிக்க கூடிய ஒரு மேடையை அமைத்துத் தரும் தன்மையே இதன் அடிப்படைச் செயற்பாடு.
இதைவிட Flickr, Twitter போன்ற தளங்களில் நீங்கள் செய்யும் மாற்றங்களையும் நிகழ் நேரத்தில் இங்கே காட்டமுடியும்.
மேலதிக தகவலிற்கு இந்த யூடியூப் காணொளியைக் காணுங்கள்
எனக்கு இன்னும் Buzz இல்லையே??
நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் புகுபதிகை செய்யும் போது Google Buzz ஐ உயிர்ப்பிக்குமாறு ஒரு வேண்டுகோள் வரவில்லையாயின் உங்கள் கணக்கிற்கு இன்னமும் கூகிள் பஸ் வழங்கப்படவில்லை என்று அர்த்தம்.
வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று எண்ணலாம்.************************
கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய வண்டு (Buzz) – ஸ்பெஷல் ரிப்போர்ட்
Posted by admin on Feb 10th, 2010 and filed under கலரி, சிறப்புச் செய்திகள், தொழில்நுட்பம். You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry
தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzzz) இதைப்பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்.
முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான். மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை. இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது " Buzz " என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.நமக்கும் வெகுவிரைவில் அழைப்பு வரும் என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய சிறப்பு வீடியோ ஒன்றையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
[ Mobile Google Buzz video ]
உங்களுக்கு இந்த சேவைவேண்டும் என்றால் நீங்கள் http://www.google.com/buzz இணையதளத்திற்கு சென்று நானும் இதை பயன்படுத்த ரெடி என்று கூற "Try Buzz in Gmail" என்ற பட்டனை அழுத்தி உங்கள் ஜிமெயிலை சேர்த்துக்கொள்ளுங்கள் உங்களுக்கும் விரைவில் அழைப்பு வரும். கூகுளின் இந்த சேவை முழுவதுமாக வெளிவந்ததும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் கொஞ்சம் அதிகஅளவில் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
http://tamiljournal.com/featured/buzz/
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment