Tuesday, February 2, 2010

[அன்புடன்] Re: Enpadaipugal - Selvendran

சிறு ஒளி ! பெரு மகிழ்ச்சி !!

கடல்தாயின் கருவில் உதித்து
அலைமடியில் மெதுவாய் தவழ்ந்து
மணலேறி மரமேறி உச்சிவந்த
கானல்நீர் வெளிச்சம்

வானத் திரை தினம்விலக்கி
அங்குமிங்கும் ஆடும் குழந்தைக்கு
உண்ணுஞ் சோறின் நிறங்காட்டும்
கண்குளிரும் வெளிச்சம்

காற்று வந்து கலைத்திடுமென
அவசரத்தில் மேல்நோக்கி பெய்த
மேக மழை துளிகளின்
கண்ணுறுத்தா வெளிச்சம்

உலகம் போற்றும் இவ்வெளிச்சங்கள்
ஒன்றுமில்லை ! பிறந்த நாளில்
காதலியின் மகிழ்முகம் காட்டி
மரித்துவிட்ட மெழுகுவர்த்தியின் முன்பு....

அன்புடன்,
செல்வேந்திரன்
http://enpadaipugal.blogspot.com


On Jan 22, 2:52 pm, Selvendran <nvselvend...@gmail.com> wrote:
> வெயில் பிரதேசமும், குளிர் பிரயாணமும் :
>
> நம்மூர் மழையினை நியாபகங் கொண்டு
> வானத்தின்கீழ் வலக்கை நீட்டியவன்
> கடனாளிக் குளிரின் பனிதூவலை
> உள்ளங்கை வாங்கியுயரே எறிகிறேன்
>
> வாரத்தில் சிலநாள் வானமே பார்த்திராதவன்
> தினமுறங்கு முன்னும் விழித்த பின்னும்
> weather.com விசாரித்தே
> வேலைக்கு விரைகிறேன்
>
> வெள்ளத்தில் வீடே மிதந்த போதும்
> வேடிக்கையாய் பாம்படித்தவன் வெள்ளை
> பனியில் மூழ்கிய காரினை
> விரைக்க விரைக்க புதையலெடுக்கிறேன்
>
> மெலிதான மழையில் கண்மூடி
> உடல்நனைந்து அமுதம் குடித்தவன்
> மிதமான பனித்தூறலில் உடல்மூடி
> கண்திறந்து குளிர் உண்கிறேன்
>
> அதிகமாய் பெய்து பலிகள்சில
> ஆனபோதும் எம்மழையை கடுஞ்சொல்
> கூறிய தில்லை
> மழைக்கு அடுத்ததாய் ஆகிவிட்ட
> மமதையில் நிற்காமல் நீடிக்கிறது
> இரண்டாம் பிள்ளை....
>
> செல்வேந்திரன்
>
> 01/21/10
>
> On Oct 11 2008, 8:24 am, Selvendran <nvselvend...@gmail.com> wrote:
>
>
>
> > ஆமாம் பூங்குழலி...
>
> > அருமையான அழகுதான்...
>
> > On Oct 11, 12:48 am, Poongulali <poongulali.selvamu...@gmail.com>
> > wrote:
>
> > > நிழல்கசியும் மரத்தின் கீழ்
> > > நிலங்கசியும் வேரின் மேல்
> > > நிறங்கசியும் இலைகளைக் கண்டு
> > > நீர்கசிய குளித்தேன் இன்று
>
> > > நானும் ரசித்தேன் இந்த  வரிகளை ....
> > > போன முறை இதே நேரம் நான் அமெரிக்காவில் இருந்தேன் ... அழகு தான் ..
>
> > > பூங்குழலி
>
> > > On 10/10/2008,Selvendran<nvselvend...@gmail.com> wrote:
>
> > > > நிறங்கசியும் இலைகள் !
>
> > > > ஒரு தாய் வயிறானாலும்
> > > > வெவ்வேறு நிறத்தில் குழந்தைகளாய்
> > > > நிலத்தாய் வளர்க்கும்
> > > > மரங்கள் வண்ணக் கலவைகளாய்
>
> > > > எழுவண்ண வானவில்லின் வண்ண
> > > > அம்புகளாய் கூர்மரங்கள்
> > > > மணிக்கணக்கில் மனங்குளிர
> > > > மஞ்சள் வெயில் நிறமரங்கள்
>
> > > > நிறப்போட்டியில் நின்று தோற்று
> > > > மரந்தள்ளி மண்வந்த பச்சோந்தி ஒன்று
> > > > காய்ந்த இலை மிதித்து
> > > > காயந்தனை ஆற்றியது
>
> > > > நிழல்கசியும் மரத்தின் கீழ்
> > > > நிலங்கசியும் வேரின் மேல்
> > > > நிறங்கசியும் இலைகளைக் கண்டு
> > > > நீர்கசிய குளித்தேன் இன்று
>
> > > > நிறம் பேசிய மனிதர்தனை
> > > > வெறுத்த மனம்
> > > > நிறம் பூசிய மரங்கள் தனை
> > > > ரசித்ததின்று ! முழுதாய் மறந்து நின்று !!
>
> > > > (அமெரிக்காவின் இலையுதிர் கால அழகினால் எழுதியது)
>
> > > > அன்புடன்,
> > > > செல்வேந்திரன்.
>
> > > > On Sep 5, 5:02 pm, Gokulan <gokulankan...@gmail.com> wrote:
> > > > > 2008/9/5Selvendran<nvselvend...@gmail.com>
>
> > > > > > ஆமாம் கோகுலன்..யாதும் ஊரே..யாவரும் கேளிர்...
> > > > > > என்ன ஒரு சிந்தனை... நம் பாட்டன் கலியன் பூங்குன்றன் அன்றே சொன்னது....
> > > > > > (அவர்தானே சொன்னது :))
>
> > > > > அவரேதாங்க செல்வா..
>
> > > > > புறநானூறு பாடல் என நினைக்கிறேன்.. :)
>
> > > > > > மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா...
>
> > > > > > அன்புடன்,
> > > > > > செல்வேந்திரன்
>
> > > > > > On Sep 5, 4:09 pm, Gokulan <gokulankan...@gmail.com> wrote:
> > > > > > > 2008/9/4Selvendran<nvselvend...@gmail.com>
>
> > > > > > > > அந்நிய நாட்டில் அகதியா?
>
> > > > > > > > சொர்கமே என்றாலும் நம்மூரை
> > > > > > > > போல வருமா ...அதற்காய்
> > > > > > > > அயலகத்தில் வாழும் வரை
> > > > > > > > நரகத்தில் வாழ்வதாகுமா
>
> > > > > > > > உண்ணாத குழந்தைக்காய்
> > > > > > > > மனைவியை திட்டுவாய்
> > > > > > > > உணவு பிடிக்கவில்லையென
> > > > > > > > தொலைபேசியில் புலம்புவாய்
>
> > > > > > > > தமிழை பேசுபவன் தமிழன்
> > > > > > > > ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயன்
> > > > > > > > இரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்
> > > > > > > > பேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்
>
> > > > > > > > சொத்து தகராறில் தம்பி
> > > > > > > > வெட்டி கொலைக்கும்
> > > > > > > > எல்லைத் தகராறில் வீரர்
> > > > > > > > சுட்டுக் கொலைக்கும்
> > > > > > > > வித்தியாசம் நிலத்தின் சுற்றளவே
> > > > > > > > வித்தியாசம் மனத்தின் சுற்றளவே
>
> > > > > > > > ஈழத்தில் உன்னினம் எரியும்
> > > > > > > > பொழுது கொதிக்கும் நெஞ்சுதனை
> > > > > > > > ஒத்ததே ஒரிசாவில் கிறிஸ்துவனை
> > > > > > > > எரிக்க கண்ட உலகவ்வினம்
>
> > > > > > > அருமை! கேளுங்க நல்லா கேளுங்க!
>
> > > > > > > > நாடென்பது நிர்வாகத்திற்காய்
> > > > > > > > பிரித்ததாகும்
> > > > > > > > மனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு
> > > > > > > > உரித்தாகும்
>
> > > > > > > > சுவாசிக்க காற்றளிக்கும்
> > > > > > > > கண்டமெல்லாம் என் கண்டமே
> > > > > > > > நதியின் கரைத்தாலும் உலகக்கடலில்
> > > > > > > > கலக்கு மென் பிண்டமே
>
> > > > > > > நல்ல வரிகள் செல்வா!!
>
> > > > > > > யாதும் ஊரே யாவரும்ம் கேளிர்!!
>
> > > > > > > > அன்புடன்,
> > > > > > > > செல்வேந்திரன்
>
> > > > > > > > On Sep 4, 2:08 pm,Selvendran<nvselvend...@gmail.com> wrote:
> > > > > > > > > அன்பின் சீனா,
>
> > > > > > > > > உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சி.
>
> > > > > > > > > அன்புடன்,
> > > > > > > > > செல்வேந்திரன்
>
> > > > > > > > > On Aug 4, 9:53 pm, "Chidambaram Kasiviswanathan"
>
> > > > > > > > > <cheena...@googlemail.com> wrote:
> > > > > > > > > > அன்பின் செல்வேந்திரன்
>
> > > > > > > > > > அருமையான கவிதை - எளிமையான உவமைகள் - இயல்பான நிகழ்வுகளைக் கொண்ட
> > > > > > கவிதை
>
> > > > > > > > > > என்ன சிந்தனை என்ன சிந்தனை !
>
> > > > > > > > > > அனைவரையும் மரணத்தை நேசிக்க வைத்து விட்டீர்களே !!
>
> > > > > > > > > > நல்வாழ்த்துகள்
>
> > > > > > > > > > அன்புடன் ..... சீனாhttp://cheenakay.blogspot.com
> > > > > > > > > > ------------------------------------------------
>
> > > > > > > > > > 2008/7/23Selvendran<nvselvend...@gmail.com>
>
> > > > > > > > > > > மரணம் நல்லது- Hide quoted text -
>
> > > > > > > > > > - Show quoted text -- Hide quoted text -
>
> > > > > > > > > - Show quoted text -
>
> > > > > > > --
> > > > > > > நட்புடன்,
>
> ...
>
> read more »

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment