Tuesday, February 2, 2010

Re: [muththamiz] Re: கண்ணீர்த் துளிகள்...



2010/1/25 முகமூடி <mask2041@gmail.com>
ஏழ்மை..
 
விண்மீன் பொத்தல்
மேகச்சேறு
நிலவுக்கிழிசலென
ஏழ்மையாய் வானம்
எம்மைபோலவே...
 <<<<<
 
இப்படியெல்லாம் எப்படிங்க தோணுது உங்களுக்கு மட்டும்?
 
சமாதி...
 
உயிரோடு என்னைப்
புதைக்காதீர்கள் எனக்
கதறியழுதது நிலம்...
மேலே பாலித்தீன்
குப்பைகள்...<<<<
 
சவுக்கடி....சாட்டையடி..நெத்தியடி....

 
ஏளனம்..
 
சிரித்தபடி
நிறைந்திருந்தார்
காந்தி...
கள்ளுக்கடைக்
கல்லாவில்<<<<<
 
வேற என்ன பண்ண முடியும்?!
 
 
எது குப்பை...?
 
குப்பைத் தொட்டியில்
சிரித்தது குழந்தை...
கண்ணீர்விட்டது
இந்த வறுமை தேசம்...<<<<
கொடுமை.
 
 
விவாகரத்து...
 
இனி என்ன
உறவு
இருக்க முடியும்
மலருக்கும் வண்டுக்கும்...?
காய்ந்த சருகாய் மலர்...<<<<
 
இந்தக்கொடுமையால தான் அந்தக்கொடுமை!
 
 
--

--
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
 
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
If you are unable to read Tamil Fonts or to type Tamil...
Please install ekalappai20b_anjal.zip from http://groups.google.com/group/Tamil2Friends/web/ekalappai20b_anjal.zip
For Online Thamizh Typing Use the Link :http://tamil2friends.com/tamil or http://www.google.com/transliterate/indic/Tamil
Website URL : http://Tamil2Friends.com

0 comments:

  • Post a Comment