Tuesday, February 9, 2010

Re: [தமிழமுதம்] Re: நெடுங்கண் நிறைக்கும்..............ருத்ரா

"உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது!  கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது அழகுச் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது ! ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண் முன்னே பரந்து கிடக்கிறது ! "

ஐஸக் நியூட்டன்

அபூர்வக் கூழங்கல்லைக் கண்டெடுப்பவர் அறிவியல் விஞ்ஞானிகள் ருத்ரா.   அவற்றைப் பட்டை தீட்டி வைரமாய் ஆக்குபவரும் அவரே.
 
 
சி. ஜெயபாரதன்.  

++++++++++++++++++
 
2010/2/9 ருத்ரா (இ.பரமசிவன்) <epsivan@gmail.com>
மதிப்பிற்குரிய விஞ்ஞான வித்தகர்
சி.ஜயபாரதன் அவர்களே!

உங்கள் மடலுக்கு மிக்க நன்றி.


புதுக்கவிதையின்
காட்சிகளும் உணர்வுகளும்
சங்கத்தமிழ்ச் செய்யுள்களில்
ஆயிரக்கணக்காய்
புதைந்து கிடக்கின்றன.
இந்த கூழங்கற்களையும்
அந்த வைரங்களையும்
சோழிகளாய் குலுக்கிப்போட்டு
விளையாடுவதிலும்
ஒரு தனி மகிழ்ச்சி உள்ளது.

இப்படிக்கு
அன்புடன்
ருத்ரா

On Feb 9, 11:06 am, Jay Jayabarathan <jayabarath...@gmail.com> wrote:
> கவிச் சக்ரவர்த்தி ருத்ரா,
>
> இந்த தமிழ்ப்பாவை அரங்கேற்ற மதுரைச் சங்க புலவருக்கு எவரும் அழைப்பிதழ்
> அனுப்பத் தேவையில்லை.
>
> தானே அரங்கேறி தாமரைத்
> தடாகத்தில்
> வானோங்கி மலர்ந்து விட்டது
> வையக  வலையில்.
> ஏனோ இப் புலவர்
> இப்போது  இங்கு பிறந்தார்
> காணாத செந்தமிழில்
> கவி எழுதிக் கொண்டு ?
>
> சி. ஜெயபாரதன்.
>
> ++++++++++++++++++++++++++++++++
> 2010/2/9 ருத்ரா (இ.பரமசிவன்) <epsi...@gmail.com>
>
>
>
> > நெடுங்கண் நிறைக்கும்
> > ================================================ருத்ரா
>
> > மைபொதி வானம் மஞ்ஞை களிப்ப‌
> > மடலம் பெண்ணை கூர் ஒலி எழுப்ப
> > கல்படு அவிழ்கதிர் விரிநிலம் பூப்ப‌
> > பளிங்கின் நுண்சிறை வண்டினம் ஆர்ப்ப‌
> > ஆநிரை சூழ்தரு அணிநகர் இலங்க‌
> > கோல் கொள் ஆயர் குரவை ஒலிக்க
> > பொறைபடு வெள்ளிய அருவியும் சிலம்ப‌
> > கறியும் வேங்கையில் படர்தந்து புரிய‌
> > கவின் நிறை குறிஞ்சி உள் உள் தகைய‌
> > குண்டுநீர் நீலம் குய்புகை நிழல‌
> > கள்ள மென் நகை கவிழ்ந்தே பூக்கும்
> > மாஇழை முன்னே வளைமுரல் செய்யும்.
> > காந்தள் ஐவிரல் கண்ணில் அளைஇ
> > ஆறு அடைத்து கதழ்பரித்து ஆங்கே
> > ஆர்கலி ஒல்லென நெடுங்கண் நிறைக்கும்.
>
> > =======================================================
>
> > அருஞ்சொற்பொருள்
> > -------------------------------------
>
> > மைபொதி......க‌ருமுகில்க‌ள் திர‌ண்டு
> > ம‌ஞ்ஞை....ம‌யில்
> > க‌ல்..ம‌லை
> > அவிழ்க‌திர்.....இள‌ங்காலை
> > பளிங்கின் நுண்சிறை வ‌ண்டின‌ம்...க‌ண்ணாடிச்சிற‌குக‌ள்
> > உடைய‌ த‌ட்டாம்பூச்சிக‌ள்.
> > கோல் கொள் ஆய‌ர்.......ஆநிரை(ப‌சுக்கூட்ட‌ம்) மேய்ப்ப‌ர்க‌ள்
> > கையில் கோல் ஏந்தி
> > குர‌வை......ப‌ண் ஒலி
> > பொறை......பாறை
> > சில‌ம்ப‌........ஒசைஎழுப்ப‌
> > க‌றி.........மிள‌குக்கொடி  வேங்கை............வேங்கைம‌ர‌ம்
> > ப‌ட‌ர்த‌ந்து புரிய‌..ப‌ட‌ர்ந்து முறுக்கு ஏற்றி சுற்றிக்கிட‌க்கும்
> > உள் உள் த‌கைய‌..நின‌க்க‌ நினைக்க அழகின் பெருமை மிக்க‌ உண‌ர்வுக‌ள் த‌ர‌
> > குண்டுநீர் நீல‌ம்...ஆழ‌ம் நிறைந்த‌ குளத்தின் நீல‌க்குவ‌ளைப்பூக்க‌ள்.
> > குய்புகை நிழ‌ல‌.......நீரின் அடியில் நெளிந்து வ‌ரும் புகை போல் நிழ‌ல்
> > காட்ட
> > கள்ள மென் நகை கவிழ்ந்தே பூக்கும்.......தலைகவிழ்ந்து(அந்த
> > குவளைப்பூவைப்போல்) மெல்ல கள்ளச்சிரிப்பு உதிர்க்கும் காதலி
> > மாஇழை......மாட்சிமை மிக்க‌ ந‌கைக‌ள் அணிந்து
> > முன்னே வ‌ளைமுர‌ல் செய்யும்...க‌ண்முன்னே கைவ‌ளைக‌க‌ளை குலுக்கி
> > ஒலிசெய்யும் காத‌லி
> > காந்த‌ள் ஐவிர‌ல் கண்ணில் அளைஇ..........காந்த‌ள் பூ போன்ற‌ ஐந்து
> > மெல்லிய‌ விர‌ல்க‌ளைக்கொண்டு வ‌ருடி
> > ஆறு அடைத்து க‌த‌ழ் ப‌ரித்து ஆங்கே........அவ‌ள் கால‌டிக‌ளின் ஒலி
> > வ‌ழியெல்லாம் விம்மிப் ப‌ர‌வ‌
> > ஆர்க‌லி ஒல்லென‌ நெடுங்க‌ண் நிறைக்கும்.........தாள‌ம் த‌வ‌றாத‌
> > ஓசையுட‌ன் நீண்டு ஒலித்து அந்த‌ வ‌ழியின் நெடிய‌ இட‌த்தில்
> > எல்லாம்(அல்ல‌து அவ‌ள் நீள்விழிப்பார்வைக‌ள்)
> > நிறைக்கும்.
>
> > ===========================================================================­======
>
> > --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> > -- பாவேந்தர் பாரதிதாசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment