Tuesday, February 9, 2010

Re: [தமிழமுதம்] மனித வெடிகுண்டாக சிறுமி..

// மீனாவின் தந்தையும்,சகோதரனும், அவரை தற்கொலை குண்டுதாரியாகுமாறு வற்புறுத்தினர் என்கிறார் அவர். அப்படிச் செய்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். //

எவனும் முன்ன பின்ன பாக்காதா சொர்கத்து போகலாம்னு  சொல்லியே அப்பாவி மக்களை ஏமாத்துறானுங்க தீவிரவாதிகள்.

13வயசில குண்டு கட்டிட்டி பாவம் அந்த சிறுமி மீனா.




~ காமேஷ் ~



 
மனித வெடிகுண்டாக சிறுமி..
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2010/02/100209_suicidebomber.shtml
 
தற்கொலை குண்டுதாரியான பயிற்றுவிக்கப்பட்ட மீனா
தற்கொலை குண்டுதாரியான பயிற்றுவிக்கப்பட்ட மீனா
தற்கொலை குண்டுதாக்குதல்கள் வாடிக்கையாகி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமி தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்து பிபிசியிடம் விவரித்தார்.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதியிலிருந்து ஒரு பஷ்டூன் இனத்தைச் சேரந்த 13 வயது சிறுமி மீனா, கூறிய கருத்துக்களை பக்கச்சார்பற்ற வகையில் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், பாகிஸ்தான் போலிசார் இவரது இந்தக் கதை உண்மையாக இருக்கக்கூடும் என்று தாங்கள் நம்புவதாகவும், அவர் அளிக்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளவை என்றும் கூறுகின்றார்கள்.

படித்து டாக்டராகி, ஏழைகளுக்கு மருத்துவத் தொண்டு செய்ய வேண்டும் என்று கனவு கண்ட இந்த மீனாவின் குடும்பத்தில் ஆண்கள் அனைவரும் , பெண்கல்விக்கு எதிராகவே இருந்தனர். இவரது அண்ணன் தாலிபான் இயக்கத்தின் தளபதி.

"ஒரு பெண்ணின் இடம் அவளது வீடு அல்லது இடுகாடு" இதுதான் அவளது அண்ணனின் கருத்தாக இருந்தது. அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதும் பள்ளியில் படிக்கும் மற்ற பெண்களை அடித்து உதைப்பது அவனது வாடிக்கை, என்கிறார் இவர்.

மீனாவின் வீட்டில் ஒரு பாதாள நிலவறை கட்டப்பட்டிருந்தது. மின்வசதியும் கொடுக்கப்பட்டிருந்த இந்த நிலவறைக்குத்தான் தாலிபான் இயக்கத்தின் தளபதிகள் வந்து செல்வது வழக்கம் என்கிறார் மீனா. கான்கிரீட் பூசப்பட்ட, பலமான இந்த நிலவறையில்தான், சிறுவர் சிறுமிகள் தற்கொலைக் குண்டுதாரிகளாவதற்கு பயிற்சியளிக்கப்பட்டார்கள் என்கிறார் மீனா.

இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், பயிற்சிகொடுக்கப்பட்ட சிறார்களில் பலர், மீனாவைவிட இளையவர்கள்.

உலகமறியாத இந்த பிஞ்சு உள்ளங்களின் அப்பாவித்தனம் தான் அவர்கள் தற்கொலைகுண்டுதாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட காரணமாயிருந்தது.

தற்கொலைக்குண்டுதாக்குதல்களுக்கு, இந்த பயிற்சி அளிக்கப்பட்ட சிறார்கள் ஒரு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்படும்போது, அவர்களை உத்வேகப்படுத்த, இஸ்லாமியப்பாடல்கள் குறுந்தகடுகளில், சிடிகளில், இசைக்கப்படுவது வழக்கம் என்கிறார் மீனா.

மீனாவின் தந்தையும்,சகோதரனும், அவரை தற்கொலை குண்டுதாரியாகுமாறு வற்புறுத்தினர் என்கிறார் அவர். அப்படிச் செய்தால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

தங்கைக்கு ஏற்பட்ட கதி

"முதலில் அவர்கள் என் சகோதரி நகிதாவின் உடலில் ஒரு குண்டைப் பொருத்தினர். அவளது கைகள் இரண்டிலும் செவ்வக வடிவ துண்டுகளையும், கால்களிலும் ஒரு கறுப்பு துண்டையும் அவர்கள் கட்டினர். பிறகு இரண்டையும் அவர்கள் இணைத்தனர். நகிதாவால் நடக்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு குண்டு கனமானதாக இருந்தது. பின்னர் அவளுக்கு அவர்கள் ஒரு மருந்தைத் தந்தன்னர். ஆனால் நகிதா உரத்த குரலில் அழத்தொடங்கி, தனது அம்மாவைத் தேட ஆரம்பித்தாள். அம்மாவை நோக்கி ஓடி அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். தன் உடலில் கட்டப்பட்டிருந்த குண்டை பார்த்ததுமே நகீதாவுக்கு நடுக்கம் வேறு ஏற்படத்தொடங்கியது" என்றார் மீனா.

ஆனால், என் சகோதரனும் அப்பாவும், என் அம்மாவை அடிக்க தொடங்கினர், " ஏன் நகிதாவை அவள் செய்யவேண்டிய வேலையை செய்யவிடாமல் தடுக்கிறாய் " என்று கேட்டபடியே அவர்கள் அம்மாவை அடித்தனர், என்றார் மீனா.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசீர் கொல்லப்பட்டபோது, தனது சகோதரனும் மற்றவர்களும் துப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டபடி கொண்டாடினர் என்கிறார் அவர்.

தான் தனது தந்தையிடமும், சகோதரனிடமிருந்தும் எப்படி தப்பி வந்தேன் என்று மீனா கூறுவதை இங்கு கேட்கலாம்.

தாலிபான்களை முற்றிலுமாக வெறுப்பதாகக் கூறும் மீனா அவர்கள் உயிரோடு எரிக்கப்படவேண்டியவர்கள் என்கிறார். தனது சகோதரன் தனது கையில் கிடைத்தால் அவனை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார் மீனா.

தனக்கு உறுதியான பலமான மனது இருப்பதாக பலர் கூறுவதாகக் கூறும் மீனா அதே நேரம் கடவுள் கூட தன்னை இறக்க விடவில்லையே என்கிறார்.


 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment