Thursday, February 4, 2010

Re: [அன்புடன்] சீன புத்தாண்டு ஜூரம்

அந்த அம்மணியை பார்த்தா பாவமா இருக்கு. 

2010/2/5 காமேஷ் <kameshcn@gmail.com>
கடந்த வாரத்திலிருந்து சீன புத்தாண்டு ஜூரம் சீனர்களையும், எங்களையும் பற்றிகொண்டது ..
பிஃப்ரவரி 14 சீன புத்தாண்டு.. அரசு விடுமுறை பிஃப் 13 லிருந்து பிஃப் 19 வரை 7 நாட்கள்.

சீனாவில் 40%மேல்  மக்கள்  வேற சீன நகரங்களில் வேலை செய்கின்றனர்.. அவர்களெல்லாம் சீன புத்தாண்டுக்கு குடும்பத்துடன் கொண்டாடவிருப்பதால் பிஃப்ரவரி மாதம்  பூமி தாய்க்கு பெரும் நெருக்கடியாக அமைய விருக்குகிறது.

எங்கே நண்பர்களை சந்தித்தாலும் அவர்களுக் பேசும் முதல் வார்த்தை 'ஊருக்கு போக இரயில் டிக்கட் வாங்கியாச்சா ?'

ஏஜண்டுகளின் தொல்லையாலும்,, போலி பிரயாண சீட்டுகளாலும் மக்களை ஏமாற்றி கொள்ளையடிப்பதை தடுக்க..அரசு முதல் முறையாக இந்த வருடத்திலிருந்து ' இரயில் பயண சீட்டு வாங்க ஐ.டி கார்ட், பெயர் தேவை ' என புது சட்டம் போடப்பட்டுள்ளதால் இரயில் பயண சீட்டு வாங்க மக்கள் அல்லோல்படுகின்றனர்.
பயண சீட்டு வாங்க விதிமுறைகள்:[சீன புத்தாண்டுக்கு மட்டும்]
1. ஒருவர் 3 சீட்டுகள் மட்டுமே வாங்க முடியும்.
2. ஒரு  ஐ.டிகார்ட்  1 சீட்டு மட்டுமே வாங்கலாம்.. ஏற்கனவே வாங்கியிருந்தால் அதை கேன்சல் செய்து புதிதாக வாங்கலாம்
3. பிரயாணத்தின் 10நாட்களுக்கு முன் மட்டுமே சீட்டு வழங்கப்படும்.
4. சீட்டு வாங்கவிருப்போர் தொலைபேசியில் அழைத்து புக்கிங் செய்து சீட்டு பெறலாம்...நேரடி கவுண்டர்களும் உண்டு..
5. உங்கள் பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் நீங்கள் இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட வேண்டும்.. சரியான பயண சீட்டு உள்ளதா என்பதை பரிசோதித்த பின்னரே ப்ளாட்ஃபாமுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

இந்தம்மா தன் குழந்தையை ஊரிலிருக்கும் தன் சொந்தகளுக்கு அறிமுகப்படுத்த இரயில் பிடிக்க போறாங்க.. சொந்தங்களுக்கு வாங்கிய பொருட்களுடன்.


?ui=2&view=att&th=1269ba166b2a0ef6&attid=0.1&disp=attd&realattid=ii_1269ba166b2a0ef6&zw


[ தொடரும் ]

~ காமேஷ் ~

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
J. HAJA MUHAYADEEN
ஆயிரம் மைல் பயணம் - முதல் அடியில் தொடங்குகிறது

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment