Friday, February 12, 2010

Re: [அன்புடன்] மெரினா கடற்கரை

அலைகளின் மொழியை மொழிபெயர்ககவியலாமல்
 
- இரசித்தேன்............!
 
மெரினா கடற்கரையை சில வரிகளில் அடக்கி விட்டீர்கள் பிச்சுமணி சார்...!
2010/2/12 பிச்சுமணி <v.pitchumani@gmail.com>


பயிற்சி இடைவேளை அதிகமானதால் இருபதாண்டு ஆசை
உழைப்பாளர்சிலையிலிருந்து கலங்கரைவிளக்கம் வரை
வானம் மேகமுட்டமாய் வெயில் உரைக்கா பகலன்று
அலைகளின் மொழியை மொழிபெயர்ககவியலாமல்
அலைகள் கால் நனைக்க  நடக்கின்றேன்

குடும்பத்தோடு வந்த கூட்டங்கள் பாதுகாப்பாய் கரையோரம்
மாணவர் கூட்டம் தைரியமாய் குளித்து விளையாடுகிறது
மாணவியர்கள் அலைநீர் கால்கள் தொடா வண்ணம் ஓடுகிறது
படகு தரும் நிழல்களில் தாவணிவீடுகளில் காதல்லீலைகள்

திருஷ்டிதேங்காய் கரைக்கும் கடலுக்கும் பயணம்
இறந்தவர் வழிபாட்டு மாலைகள் கற்பூரங்கள் கரைகளில் தங்கல்
மீனவர்கள் வீசிய இறந்தமீன் கடல்புக முடியாமல் அலையில்

சோளி ஒன்று கண்டு வியந்து  சேகரித்தேன்
சிப்பிகளில்  ஒவியம் கவர சேகரித்தேன்

மீண்டும் உழைப்பாளர் சிலை வரை செல்கையில்
குதிரையின் நிழலில் குதிரைக்காரன் இளைப்பாறுகிறான்
காதலன்நிழலில் காதலிகள் சிலர் இளைப்பாறுகிறார்கள்

கடற்கரையில் சேகரித்த சோளி சிப்பிகளை செல்லமகளிடம் காண்பிக்க
விட்டுவிட்டு சென்றுவிட்டதாக சண்டையிட்டாள்


http://manimalar.wordpress.com/2010/02/12/%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88/

--
அன்புடன் - உலகின் முதல்
      யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html



--
~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~
If you love something, set it free...
If it comes back, it is yours...
if it does not, it never was....!
~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment