[பண்புடன்] Re: தம்பதியர்களை அண்ணன் தங்கையாக வாழ உத்தரவிட்டுள்ளது கிராம பஞ்சாயத்து
இது போன்ற பஞ்சாயத்துகளை என்ன செய்யலாம்?????????????
தம்பதியர்களை அண்ணன் தங்கையாக வாழ உத்தரவிட்டுள்ளது கிராம பஞ்சாயத்து
அரியானாவில் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த இருவர் காதலித்து திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டனர். ஒரே கோத்ரத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற காரணத்தை கூறி அந்த தம்பதியை கிராம பஞ்சாயத்தினர் அவர்களை பிரித்து விட்டனர். இனிமேல் அண்ணன், தங்கை உறவுடன் வாழ வேண்டும் என்றும் கட்டளையிட்டனர்.
காதலிப்பதை தவறென்று வெறுத்து ஒதுக்கும் பழக்கம் கிராமங்களில் அதிகமாக உள்ளது. அரியானா மாநிலம் ஜாஜ்ஜர் மாவட்டத்தில் பாகி, கேரி என்ற இரண்டு கிராமங்கள் உள்ளன. கேரி கிராமத்தைச் சேர்ந்த சதிஷ் பீர்வால் என்பவர் பாகி கிராமத்தைச் சேர்¢ந்த கவிதா என்ற பெண்ணை காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
முன்று ஆண்டுகளுக்கு கழிந்த பின் இப்பொழுது இருவரையும் கேரி கிராமத்தினர் பஞ்சாயத்து முன்பு நிறுத்தி இருவரின் கோத்ரம் பற்றி பஞ்சாயத்தார் கேட்டனர். கவிதா பினிவால் கோத்ரம் என்றும் சதிஷ் பீர்வால் கோத்ரம் என்று கூறினர். இந்த இரண்டு கோத்ரங்களைச் சேர்ந்தவர்கள் அண்ணன், தங்கை சகோதர உறவு உடையவர்கள் என்பதால் கிராமங்களில் இந்த கோத்ரங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆகையால், சதீஷ் & கவிதா திருமணம் செல்லாது என்றும் அவர்களது திருமணத்தை பஞ்சாயத்து ரத்து செய்கிறது என்று தெரிவித்தது, இனிமேல் தம்பதியர் இருவரும் அண்ணன், தங்கை உறவுடன் தான் பழக வேண்டும் என்றும் .கவிதா தன்னுடைய குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு (பாகி கிராமத்துக்கு) செல்ல வேண்டும் என்றும் பஞ்சாயத்து உத்தரவிட்டு 28 நாட்கள் அவகாசம் தரப்படும் என்று தெரிவித்தது.
பஞ்சாயத்து உத்தரவை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பஞ்சாயத்தார் எச்சரித்தனர்.இதேபோல், சதீஷ் தந்தை ஆசாத் சிங்குக்கு பஞ்சாயத்து ஓர் உத்தரவை பிறப்பித்தது. குடும்ப சொத்துகளில் இருந்து மகன் சதீஷை பிரித்து விடவேண்டும். பேரக் குழந்தை பெயரில் வங்கியில் ரூ.3 லட்சம் டிபாசிட் செய்ய வேண்டும் என்று கடும் நிபந்தனை விதித்தது.இந்த கிராம பஞ்சாயத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை 6 மணி நேரம் நடந்தது. கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெவ்வேறு ஜாதியினர் கலப்பு திருமணங்கள் தொடர்பாக இதுபோன்ற கிராம பஞ்சாயத்துக்கள் அவ்வப்போது அதிரடி தீர்ப்புகளை வழங்குவது அரியானா மாநிலத்தில் சகஜம்.
காதல் தம்பதியை பிரித்த கிராம பஞ்சாயத்து தீர்ப்பு இரண்டு கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், அரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து அரியானா போலீஸ் உயர் அதிகாரியிடம் கேட்டபோது, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுவரை புகார் எதுவும் போலீசிடம் வரவில்லை. இருந்தாலும், எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் போலீசார் தயாராக இருக்கின்றனர் என்று தெரிவித்தார்
Read more: http://meenakam.com/?p=5030#ixzz0eO2iSKcs
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
If you are unable to read Tamil Fonts or to type Tamil...
Please install ekalappai20b_anjal.zip from http://groups.google.com/group/Tamil2Friends/web/ekalappai20b_anjal.zip
For Online Thamizh Typing Use the Link :http://tamil2friends.com/tamil or http://www.google.com/transliterate/indic/Tamil
Website URL : http://Tamil2Friends.com
--
J. HAJA MUHAYADEEN
ஆயிரம் மைல் பயணம் - முதல் அடியில் தொடங்குகிறது
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment