[பண்புடன்] அழகு குறிப்பு
அழகு குறிப்பு
முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து
முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
சுருக்கங்களை போக்க
முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம்
கழித்து கழுவிவிடவும்.
(வரண்ட சருமத்திற்க்கு)
தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில், ஆலிவ் எண்ணையை
தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!
(கரும்புள்ளிகளை விரட்ட)
.. முகத்தை கண்ணாடியில் பார்த்தால் ஒரே கரும்புள்ளிகளாக தெரிகிறதா? கவலை
வேண்டாம், உங்கள் முகத்தையே கண்ணாடிபோல் மாற்ற இதோ ஒரு அருமையான வழி.
ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு துருவல் சாறு, அரை டீஸ்பூன் தக்காளி
விழுது ஆகியற்றை நன்றாக கலக்கவும். இந்த கலவையை காலை, மாலை இருவேளையும்
முகம் முழுவதும் நன்கு தடவவும்.
தொடர்ந்து ஒரு மாதம் இதை செய்து வந்தால், சில வாரங்களிலேயே நீங்கள்
கண்ணாடியில் முகம் பார்க்கும்போது உங்கள் முகமும் கண்ணாடி போல்
ஜொலிக்கும்.
மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?
நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது பால்
சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக்
போடலாம்.வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து
காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற காயிலும் இதே
முறையை பின்பற்றலாம
--
என்றும் நன்றியுடன்
அகமொழி
http://agamozhi.blogspot.com
http://agamozhi.wordpress.com
http://rajeshfashions.blogspot.com
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
0 comments:
Post a Comment