Monday, February 8, 2010

[பண்புடன்] நெத்திலிக் கருவாடுகுழம்பு

நெத்திலிக் கருவாடுகுழம்பு


தேவையான பொருட்கள:

சுரைக்காய் -1கப்(நறுக்கியது)
நெத்திலிக்கருவாடு -20
புளிகரைசல் -1/4கப்
உப்பு -தேவையான அளவு
மஞ்சள்பொடி -1/4ஸ்பூன்


வறுத்து அரைக்க தேவையானவை:

சின்னவெங்காயம் -10
தனியா -1/2ஸ்பூன்
காய்ந்தமிளகாய் -2
பூண்டு -2பல்
சீரகம் -1/4ஸ்பூன்
தேங்காய்துறுவல் -1/4கப்
தக்காளி -1
எண்ணை -1ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை -1ஸ்பூன்
கடுகு -1/4ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
வெந்தயம் -1/4ஸ்பூன்

செய்முறை :

கருவாட்டை சுடுதண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து நன்கு அலசிவைக்கவும்.
வறுத்து அரைக்க குடுத்தவற்றை எண்ணையில் வறுத்து நன்கு அரைத்துவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணை ஊற்றி கடுகு,வெந்தயம் போட்டு பொரிந்தவுடன்
கறிவேப்பிலை போட்டு சுரைக்காய் போடவும்.
காய் நன்கு வதங்கியவுடன் அரைத்தவிழுது,புளிக்கரைசல் சேர்த்து தேவையான
தண்ணீர் ஊற்றி மஞ்சள்பொடி,உப்பு போட்டு மூடிவைத்து வேகவிடவும்.
காய் வெந்தவுடன் கருவாடு போட்டு 5நிமிடம் கொதித்து குழம்பு சற்று
கெட்டியானவுடன் இறக்கவும்


--
என்றும் நன்றியுடன்

அகமொழி
http://agamozhi.blogspot.com
http://agamozhi.wordpress.com
http://rajeshfashions.blogspot.com
http://rajeshkannark.blogspot.com

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

0 comments:

  • Post a Comment