[அன்புடன்] அஜித்தின் அசல் படமும் அசல் தமிழனும்
இன்று மாலை முரசில் இரண்டு செய்திகள் அருகருகில் வெளியாகி இருந்தது.
இரண்டுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக என் மனம் கூறியது.
முதல் செய்தி. கூடுவாஞ்சேரியில் செங்கல்பட்டு செல்லும் முக்கிய
சாலையின் ஒரமாக ஒரு முதியவர் படுத்து கிடந்ததாகவும் அவருக்கு மனமிரங்கி
ஏறியப்பட்ட உணவு பெட்டலங்களை சாப்பிடாமல் 5 நாட்கள் அந்த இடத்தில்
கிடந்ததாகவும் காஞ்சிபுரம் மாவட்டஆட்சித்தலைவருக்கு தெரிவிக்கப்பட்டு
செங்கல்பட்டு வட்டாட்சியர் வந்து அந்த பெரியவரை மருத்துவமனையில் சேர்த்து
மருததுவம் பார்த்து அவர் நல்ல நிலைஅடைந்தவுடன் விவரம் கேட்ட போது, அவர்
தனது சொந்த மகன்களால் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக சிற்றூந்தில்
அழைத்து வரப்பட்டு கூடுவாஞ்சேரியில் தள்ளி விடப்பட்டதாகவும் மகன்களே
தள்ளி விட்டு போன பிறகு என்ன வாழ்வு வேண்டி இருக்கிறது என்று உணவு
சாப்பிடவில்லை என்று தெரிவித்தார் என்றும் மகன்களின் பெயர்களை
வற்புறுத்தி கேட்டும் முதியவர் சொல்லவில்லை ஆனால் தனது பெயர் கலில்
முகம்மது என்றும் தான் செல்வந்தர் என்றும் தன்னை வீட்டில் வைத்து
பராமரிக்க பிடிக்காமல் மருமகளுடன் சேர்ந்து கொண்டு மகன்கள் இவ்வாறு
தன்னை தள்ளி விட்டு சென்று விட்டார்கள் என்று தெரிவித்தார். அவரது பையில்
இருந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிட்டிருந்த திநகர் முகவரியில்
விசாரித்தில் அதில வேறு நபாகள: இருப்பதாகவும் முதியவரின் மகன்களை கண்டு
பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டிருந்தது.
மற்ற செய்தி: தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் ஒரு திரையரங்கில் இன்று
அஜித் நடித்த அசல் திரைப்படம் வெளியானதை ஒட்டி அவரது விசிறிகள் காலையில்
முதல் காட்சிக்கு முன்பாக ஆட்டு கிடா ஒன்றை கொண்டு வந்து திரைஅரங்கின்
முன்பாக வெட்டி பலியிட்டு அசல் படம் வெற்றி வேண்டிகொண்டதாகவும் முதல்
நுழைவுசீட்டை அந்த நகர சபை தலைவர் அளிக்க அஜித் விசிறி சங்க தலைவர்
பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
உங்களுக்கு ஏதாவது தொடர்பு தெரிகிறதா.
http://manimalar.wordpress.com/2010/02/05/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a/
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment