Monday, February 8, 2010

[பண்புடன்] பிரியாணி

பிரியாணி
தேவையானபொருள்கள் :

சீரகசம்பாஅரிசி - அரைகிலோ
மட்டன் - அரைகிலோ
பட்டை - 2
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 1
பூண்டு - 6 பல்
இஞ்சி - 50 கிராம்
எண்ணெய் - 50 கிராம்
நெய் - 50 கிராம்
தக்காளி - கால்கிலோ
பெரிய வெங்காயம் - கால்கிலோ
மிளகாய் - 4
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மல்லிதூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்
புதினா - அரைகட்டு
தயிர் - அரைகப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

அரிசியை கழுவி ஊறவைக்கவும். மட்டனை சுத்தம்செய்யவும். வெங்காயம்
தக்காளியை நறுக்கவும். ஒருபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை,
லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின் அதனுடன் வெங்காயம் போட்டு
பொன்னிறமாகும் வரை வதக்கவும், பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி
சேர்த்து ப்ச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு கறி, மஞ்சள்தூள்,
மிளகாய்தூள், மல்லிதூள், மிளகாய் சேர்த்து எண்ணெய் கசிந்து வரும் வரை
வதக்கவும். அரிசியின் அளவுக்கு இரண்டு மடங்காக தண்ணீர் ஊற்றி உப்பு
சேர்த்து வேகவைக்கவும் முக்கால் பதத்திற்கு வந்ததும் அரிசி சேர்த்து
கிளறவும். கொதித்து குமிழ்வரும் வரை காத்திருக்கவும், பிறகு கிளறி தம்
போடவும். அரை மணி நேரம் வைத்து முடியை திறந்து சாதத்தை மெதுவாக கிளறி
எடுக்கவு்ம். சுவையான பிரியாணி தயார்.

--
என்றும் நன்றியுடன்

அகமொழி
http://agamozhi.blogspot.com
http://agamozhi.wordpress.com
http://rajeshfashions.blogspot.com
http://rajeshfashionss.page.tl

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

0 comments:

  • Post a Comment