Re: [தமிழமுதம்] Re: கடவுளை நம்பும் முட்டாள்களே!
/////பெரியார் களஞ்சியம்! - தொகுதி : 2 - கடவுள்
கடவுள் மறுப்பு
கடவுளை நம்பும் முட்டாள்களே!
அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்;
அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார்;
அவரன்றி ஒரு அணுவும் அசையாது;
அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார்
என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே!
கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?
கடவுள் இருக்கிறார் என்றால் ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?
பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை?
கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும், எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும் வணங்கியும் வந்தும், "யோக்கியனாகவோ, கவலை யற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காணமுடியவில்லையே. ஏன்?
கடவுள் பாதுகாப்பு இருந்தால் வீட்டிற்குக் கதவு, தாழ் போடாமலும், பெட்டிக்குப் பூட்டு போடாமலும் அவற்றில் பண்டங்கள் வைக்க முடியவில்லையே, ஏன்? மனிதன் எதனால் "கெட்ட" காரியங்களைச் செய்கிறான்?
ஒரு மனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏன் 'தீங்குகள்' செய்யப்படுகின்றன?
கடவுள் நம்பிக்கைக்காரர்களிடத்தில் காணப்படும் நற்குணங்கள் என்ன?
மனிதனிடம் காணப்படும் தீய குணத்திற்குக் காரணஸ்தர்கள் யார்?
- (14.07.1970- "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)
http://tamizachiyin-periyar.com/index.php?article=1866 ////
++++++++++++
முதலில் இந்தக் கட்டுரையைப் பெரியார் எழுதவில்லை. வெங்காய வாடை இல்லாமல் இப்படிச் செந்தமிழில் பெரியார் எழுதியதே இல்லை. அதாவது பெரியாரின் சீடரோ சிஷ்யையோ எழுதியது.
கடவுள் இல்லை என்பவரும் முட்டாள்களே.
ஐந்தாம் வகுப்புக் கூடப் படியாத பெரியார் தனது கைப்பட இந்த அற்புதமான பிரபஞ்சம் ஓளிமந்தைகள், அண்ட கோளங்கள், பயிரினங்கள், உயிரினங்கள் எப்படித் தோன்றன ஏன் தோன்றின என்று எழுதத் தெரியவில்லை.
+++++++++++++++++++++++++
2010/2/6 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
6-2-10 அன்று, தஞ்சை-மீரான் <smeeran.tnj@gmail.com> எழுதினார்:இன்றைய உலகில் கடவுளை நம்பியவர்கள் முன்னனியில் உள்ளாரா?அல்லதுகடவுளை மறுத்தவர் முன்னனியில் உள்ளாரா?
(அது ஏதோ ஒரு கடவுளாகட்டும், கடவுள் நம்பிக்கை மனதில் ஒரு அமைதியை தரும். உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு கடவுளின் பயம் நிச்சயம் இருக்கும். அனைவருமே மரணத்திற்கு சொந்தகாரர்கள்தான்)எனக்கு சத்தம் போட்டு கத்த தெரியும் என்பதற்காக நான் வீச் என்று கத்தினேன். கத்திவிட்டு பார்த்த பொழுது எனது சத்தம் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை சென்று அடைந்திருந்தது. ஆனால் அந்த சத்தத்தினால் யாதொரு பயனும் இல்லை.நான் கத்தியதால் என் தொண்டை மட்டும் வலித்தது.எனக்கு பிளாண்ட் இசுலாம்லிருந்து வரும் மடல்களை அனுப்புகிறவர் இதை உணர்ந்தால் சரி
நான் வழி மொழிகிறேன்.
புரிந்து கொண்டவர்கள் மீண்டும் கத்த மாட்டார்கள்.இனி வராது என நம்பலாமா?
நம்பிக்கையே வாழ்வின் தும்பிக்கை... :) :) :)
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment