Monday, February 8, 2010

Re: [அன்புடன்] கலைஞரின் வைர வரிகள்

நல்ல அனுபவ அறிவுரைதான்

2010/2/9 சாதிக் அலி <sadeekali@gmail.com>

புகழுரைக்கு மயங்காதீர்:​ "இந்திரனே,​​ சந்திரனே' என்றெல்லாம் புகழ்ந்து உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள்,​​ அதே வேகத்தில் உங்களை கீழேதூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பார்கள்.​ இதை மனதில் கொண்டு,​​ அவர்கள் உங்கள் காதருகே பேசும்போதெல்லாம் நீங்கள் காது கேளாதோராகிவிட வேண்டும்.

​ மற்றவர்களைப் பற்றி உங்களிடம் அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம் நீங்கள் வாய் பேசாதோராகிவிட வேண்டும்.​ இப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடிப்பீர்களேயானால்,​​ கலை உலகிலும் சரி,​​ அரசியல் வட்டாரத்திலும் சரி,​​ மொத்தத்தில் பொதுவாழ்க்கையிலே உயர்ந்ததோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும்.

​ கோபுர கலசத்தின் நிலை:​ இல்லையேல்,​​ எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும்,​​ கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல்,​​ தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அந்தக் கோபுர கலசத்தின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

--
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

       sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment