Thursday, February 11, 2010

[தமிழமுதம்] Re: கண்ணீர்த் துளிகள்...

நிசப்தம்
 
உன்னிலிருந்து
காதல் வெடித்து
வெளிவரப்போவதில்லை..
ஆதவனைப்போலவே
உன் காதலும் வெடிக்காத
ஹைட்ரஜன் குண்டு...
 
 
சான்று...
 
உன்
விழிவிளையாட்டில்
சின்னதாய்ச் சிந்தும்
மகரந்தத் துளிகளைச்
அள்ளிப்பருகியதில்...
பிறந்திருக்கிறது
என் காதல்...
 
 
வன்பொருள்... 
 
உன்னிலிருந்து
தரவிறக்கம்
செய்யவியலாத
மென்பொருள்
என் காதல்...
 
 
ஜடம்
 
உன்
நீல்விழிக்கடலில்
உயிர்ப்புடன்
செத்து மிதக்கிறது
என் காதல்... 
 
 
முதுமை
 
உன் பார்வை
துப்பிய 
புற ஊதாக்கதிர்களில்
சிதைக்கப்பட்டு
தோல்வெதும்பிக்
கிழமைகளைக் கழிக்கிறது
இளமை...
 
 
மரணம்..
 
நிச்சயிக்கப்பட்ட
மரணம்
நிச்சயம் வரும்..
அதைப்போல
உன் வரவுக்கென
காத்திருக்கிறது உயிர்...
 
 
பாசம்...
 
பாசக்கயிற்றுடன்வந்த
எமன் ஏமாந்தான்...
காதலுக்குள் அல்லவா
ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது
இந்த உயிர்...
 
 
தீண்டல்...
 
என் கொதிநிலை
மிகச்சில டிகிரி
சென்டிகிரேடுதான்
உன் தீண்டலில்
 
 
பதங்கமாதல்...
 
வறண்ட உன்
புன்னகையில்
இந்த சிதை
எரியூட்டப்படுகிறது..
மிச்சமிருக்கும் காதலும்
மென்மையாய்
பதங்கமாகிறது...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment